Home சினிமா கோலிவுட் தனுஷ் பர்த்டே ஸ்பெஷல்: டுவிட்டரில் டிரெண்டாகும் #இந்த_ஜகத்தின்_அரசனே ஹேஷ்டேக்!

தனுஷ் பர்த்டே ஸ்பெஷல்: டுவிட்டரில் டிரெண்டாகும் #இந்த_ஜகத்தின்_அரசனே ஹேஷ்டேக்!

323
0
Dhanush Birthday Special

Dhanush; தனுஷ் பர்த்டே ஸ்பெஷல்: டுவிட்டரில் டிரெண்டாகும் #இந்த_ஜகத்தின்_அரசனே ஹேஷ்டேக்! நடிகர் தனுஷ் வரும் 28 ஆம் தேதி 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், டுவிட்டரில் #இந்த_ஜகத்தின்_அரசனே என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தனுஷின் பிறந்தநாளுக்கு இன்னும் 16 நாட்கள் உள்ள நிலையில், டுவிட்டரில், #இந்த_ஜகத்தின்_அரசனே என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், 3, வேலையில்லா பட்டதாரி, மாரி, வேலையில்லா பட்டதாரி 2, மாரி 2, வட சென்னை, அசுரன் என்று மாஸ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரது நடிப்பில், ஜகமே தந்திரம், கர்ணன் மற்றும் பாலிவுட் படமான Atrangi Re ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

ஒரு நடிகரைத் தொடர்ந்து, இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், ஜகமே தந்திரம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியாகும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வரும் 28 ஆம் தேதி தனுஷ் தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு தனுஷ் ரசிகர்கள் தற்போதே புகைப்படம் ஒன்றை உருவாக்கி #இந்த_ஜகத்தின்_அரசனே என்ற ஹேஷ்டேக் மூலம் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் தனுஷ் கையில் வாலுடனும், தலையில் கிரீடத்துடனும் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

Previous articleஅரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கிருமி நாசினி தெளிப்பதற்காக மூடல், பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை அடுத்து நடவடிக்கை
Next articleஅமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா: ஐஸ்வர்யா ராய்க்கு நெகட்டிவ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here