Home Latest News Tamil நன்றி உணர்வோடு செயல்பட்ட பாரதிராஜா போலிசாருக்கு உதவி!

நன்றி உணர்வோடு செயல்பட்ட பாரதிராஜா போலிசாருக்கு உதவி!

201
0

Bharathiraja; கொரோனா வைரஸ் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் மற்றும் மருத்துவர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா  மாஸ்க் வழங்கியுள்ளார்.

போலீஸ் அதிகாரிகளுக்கு மாஸ்க் வழங்கி இயக்குநர் பாரதிராஜா உதவி செய்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என்று அனைவருமே களத்தில் இறங்கி மக்களுக்காக போராடி வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் வகையில், மாஸ்க், உணவு ஆகியவற்றை பலரும் உதவி வருகின்றனர். அந்த வகையில் பாரதிராஜாவும் அவர்களுக்கு மாஸ்க்குகள் வழங்கியுள்ளார்.

இது குறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் அழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது.

நன்றி உணர்வின் சிறிய அடையாளமாக காவல்துறையினர், துப்புரவு பணியாளகர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மாஸ்க்குகள், குளோஸ் மற்றும் சானிடைசர் ஆகியவற்றை வழங்கியுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here