Home Latest News Tamil 50 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும் திறன்: புதிய ஸ்மார்ட்ஃபோன்

50 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும் திறன்: புதிய ஸ்மார்ட்ஃபோன்

583
0

50 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும் திறன்: புதிய ஸ்மார்ட்ஃபோன்

இன்றைய ஸ்மார்ட்ஃபோன்களில் அனைவருக்கும் பிடிக்காத ஒரு விஷயம் அதில் சார்ஜ் விரைவில் இறங்குவதே. அதற்கு எல்லாம் முட்டுக்கட்டை வைக்குமாறு எனெர்ஜிஸெர் என்ற புதிய மொபைல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸை சேர்ந்த  ஆவெனிர் டெலிகாம் என்ற நிறுவனம் எனெர்ஜிஸெர் என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. தோற்றத்தில் ஸ்மார்ட்ஃபோன் ரொம்ப தடிமனாக தெரிகிறது.

18,000mAh சக்தி கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் ஃபோன் மிகவும் பெரிதாக தோற்றமளிக்கிறது. தொடர்ந்து 50 மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும் தன்மையும் கொண்டுள்ளது.

செல்போனின் மற்ற அம்சங்களைப் பார்க்கையில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் மூன்று பின்பக்க கேமரா என்று நவீன ஸ்மார்ட்போன்கள் போல் இருக்கிறது.

இதன் பேட்டரி இரண்டு நாட்கள் தொடர்ந்து வீடியோ பார்க்கும் அளவுக்கு திறனும் கால் மட்டும் பேசினால் நான்கு நாட்கள் கூட நிற்கும் தன்மை கொண்டுள்ளது.

அதிக விலையுள்ள ஐபோன், சாம்சங் போன்களுக்கு நிகரான தொழில்நுட்பங்கள் இதில் கிடையாது.

இதை விட நான்கு மடங்கு குறைவாக பேட்டரி திறன் கொண்ட ஐபோன், சியோமி நிறுவனத் தயாரிப்புகள் 14 முதல் 16 மணி நேரம் வீடியோ பார்க்கும் தன்மை கொண்டுள்ளவை.

50 மணி நேரம் தரமாக சார்ஜ் நிற்கும் என்பதை நிறுவனம் உறுதியாக கூறுகிறது. நீண்ட நேரம் சார்ஜ் தேவைப்படுபவர்கள் இந்த எனெர்ஜிஸெர் போனை வாங்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here