ஐபிஎல் போட்டியின்போது கங்குலி என்னிடம் ‘ஒரே நாளில் உங்கள் வாழ்க்கை மாறிவிட்டது என்று கூறினார்’ என்று பிரண்டன் மெக்கல்லம் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
2007 ஆம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டிலேயே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆன பிசிசிஐ ஐபிஎல் போட்டியை அறிமுகம் செய்தது.
இது இந்திய வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் புதிதாக இருந்தது. 2008 ஆம் ஆண்டு முதல் போட்டியில் கல்கத்தா மற்றும் பெங்களூரு அணி மோதியது.
கொல்கத்தா அணிக்காக பிரன்டன் மெக்கல்லம் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார்ஶ்ரீ அந்த ஆட்டத்தில் 77 பந்துகளில் 158 ரன்கள் குவித்து தான் ஒரு அதிரடி வீரர் என்பதை நிரூபித்தார்.
அப்போதெல்லாம் பிரண்டன் மெக்கல்லம் நியூசிலாந்து மிகப்பெரிய வீரர் கிடையாது. ஐபிஎல் போட்டிக்கு பிறகு மிகப்பெரிய ஜாம்பவானாக உருவெடுத்தார்.
இந்த 158 ரன்கள் ஐபிஎல் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு என்றுமே மறவாத ஒன்றாக இருக்கும். ஐபிஎல் முதல் போட்டியில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்.
இதுகுறித்து பிரண்டன் மெக்கல்லம் கூறியதாவது :
“என்னால் ஏராளமான ரியாக்ஷன் களை ஞாபகப்படுத்த முடியவில்லை. ஆனால் கங்குலி அன்று இரவு வந்து சொன்னதை என்னால் ஞாபகப்படுத்த முடியும்.
கங்குலி அன்று இரவு என்னிடம் வந்து உங்கள் வாழ்க்கை ஒரே நாளில் மாறிவிட்டது என்று சொன்னவுடன் எனக்கு அதற்கு அன்று சரியான அர்த்தம் புரியவில்லை.
தற்போது அதை நினைத்து பார்க்கையில் 100% அதை ஒத்துக் கொள்கிறேன்.
அணி நிர்வாக தலைவர் ஷாருக்கான் என்னிடம் வந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் என்றும் இருப்பீர்கள் என்று கூறினார்.
நான் கொல்கத்தா அணியுடன் விளையாடிய காலத்திலும், வெளியேறி வேறு அணியில் விளையாடிய காலத்திலும், சிறந்த உறவோடு தான் இருந்தோம்.
நான் எப்போதுமே மிகவும் விசுவாசமாக தான் இருந்தேன். எனக்கு கல்கத்தா வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி சொல்லியாக வேண்டும்.
மீண்டும் பயிற்சியாளராக கொல்கத்தா எனக்கு வாய்ப்பு கொடுத்தபோது ஷாருக்கான் என்னிடம் வந்து கொல்கத்தா அணியுடன் என்றும் ஈடுபட்டு இருப்பீர்கள் என்று கூறியது நினைத்துப் பார்க்கிறேன்”
என்றார்