Twitter Fleets Enable; ட்விட்டரில் எப்படி ஸ்டோரி வைப்பது?
இன்ஸ்டாக்ரம் மற்றும் பேஸ்புக் போல ட்விட்டர் முதன் முறையாக ப்ளீட் என்னும் ஆப்ஷன் கொண்டுவந்துள்ளது. இது ஸ்டோரி போலவே இயங்கும் 24 மணி நேரத்தில் மறைந்துவிடும்.
ட்விட்டர் ப்ளீட்டை (Twitter Fleets) உங்களால் ரீட்வீட் செய்ய இயலாது. இதை லைக் செய்ய இயலாது ஆனால் பிரைவேட் ரிப்ளை மட்டும் செய்ய இயலும்.
முதலில் பிரேசில் நாட்டில் மட்டும் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதிகமாக பொது பதிவுகள் கலந்துரையாடல் என இல்லாமல் தங்கள் தின வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்யவே இந்த ஆப்ஷன் கொண்டு வரப்பட்டதாம்.
பேஸ்புக் இன்ஸ்டாக்ரம் ஸ்டோரிஸ் மற்றும் ஸினப்ஜாட் ஸினப் போல ட்விட்டர் ப்ளீட் மூலம் அவ்வப்போது நிகழ்வுகள் அதிகம் பகிரப்படும் என எதிர்பார்க்கிறோம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
பிரைவேட் ஜாட்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் பிற சமூக வலைதளங்கள் போல பயனாளர்கள் அதிக நேரம் செலவிட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.