Home சினிமா கோலிவுட் போச்சு, இப்போ கீர்த்தி சுரேஷின் பென்குயின் படமும் OTTயில் ரிலீஸ்!

போச்சு, இப்போ கீர்த்தி சுரேஷின் பென்குயின் படமும் OTTயில் ரிலீஸ்!

369
0
Penguin Release On OTT Platform

Keerthy Suresh; போச்சு, இப்போ கீர்த்தி சுரேஷின் பென்குயின் படமும் OTTயில் ரிலீஸ்! கொரோனா காரணமாக புதிய படங்கள் திரைக்கு வராத நிலையில் கீர்த்தி சுரேஷின் பென்குயின் படம்  நேரடியாக ஓடிடி ஆன்லைன் தளங்களில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பென்குயின் படம் நேரடியாக OTT தளங்களில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

கொரோனா காரணமாக வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால், புதிய படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல தயாரிப்பாளர்களின் கவனம் எல்லாம், OTT பக்கம் திரும்பியுள்ளது.

அதன் முதல் நடவடிக்கையாக ஜோதியாக நடிப்பில், சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் படத்தை OTT ஆன்லைன் தளங்களில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

இனிமேல், சூர்யா தொடர்புடைய படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று அறிவித்தனர்.

எனினும், இதையெல்லாம் பொருட்டாக நினைக்காமல் தொடர்ந்து OTT ஆன்லைன் தளங்களில் படங்களை வெளியிட இருப்பாக அறிவிப்பு வந்த வண்ணம் இருந்தது. ஆர்கே நகர் படமும் ஆன்லைனில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேசிய விருது பெற்ற மக்கள் செல்வி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பென்குயின் படம் ஜூன் மாதம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜின் Stone Bench Films நிறுவனம் மற்றும் Passion Studios நிறுவனம் இணைந்து பென்குயின் படத்தை தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் படம் என்பதால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் மே 25 ஆம் தேதி அல்லது ஜூன் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous article14 வயது மாணவியை சந்தித்த 21 வயது வாலிபர் கொலை, 3 பேர் கைது கோவை
Next articleஊரடங்கை மீறிய சர்ச்சை நடிகை பூனம் பாண்டே: மும்பை போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here