Home சினிமா கோலிவுட் லட்சுமி ராமகிருஷ்ணனின் வனிதா ட்வீட்: வைரலாகும் சரமாரி கேள்வி!

லட்சுமி ராமகிருஷ்ணனின் வனிதா ட்வீட்: வைரலாகும் சரமாரி கேள்வி!

298
0
Vanitha Peter Paul Wedding

Lakshmi Ramakrishnan Tweet; லட்சுமி ராமகிருஷ்ணனின் வனிதா ட்வீட்: வைரலாகும் சரமாரி கேள்வி! வனிதா திருமணம் குறித்தும், பீட்டர் பாலின் முதல் மனைவி குறித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

வனிதாவின் 3ஆவது திருமணம் குறித்தும், பீட்டர் பாலின் முதல் மனைவி புகார் குறித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்தப் படத்திற்கு அவர் நடித்த படங்கள் போதுமான வரவேற்பு பெறாத நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

கடந்தாண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

கருத்து வேறுபாடு கரணமாக 2007 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து அதே ஆண்டில், ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும், 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தற்போது வனிதா 3ஆவதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கொஞ்ச நேரத்திலேயே பீட்டர் பால் மீது அவரது முதல் மனைவி எலிசபெத் ஹெலன் (41) சென்னை வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

2 குழந்தைகளுடன் 7 வருடங்களாக பிரிந்து வாழும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இன்னும் விவாகரத்து கூட பெறவில்லை என்றும் பீட்டர் பால் மீது புகார் அளித்துள்ளார்.

இது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கொள்ளப்போவது முன்னதாகவே தெரிந்த நிலையில், ஏன், திருமணம் செய்து கொண்ட பிறகு புகார் அளித்துள்ளார் என்பது பலரது கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில், இந்த புகார் குறித்து மிகவும் கூலாக வனிதா பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எலிசபெத் ஹெலன் கொடுத்த புகாரால் நான் என்னவோ ஏமாந்துவிட்டதாக பலரும் நினைக்கிறார்கள். நான் ஒன்றும் ஏமாறவில்லை.

கடந்த 8 வருடங்களுக்கு முன்னரே தனது மனைவியை பீட்டர் பால் பிரிந்துவிட்டார். அவரைப் பற்றி முழுமையாக எனக்கு தெரியும்.

இருவருமே தனித்தனியாகத்தான் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு இடையில் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. இந்தப் பிரச்சனையை எங்களது வழக்கறிஞர் பார்த்துக் கொள்வார்.

எலிசபெத் ஹெலன் ஒரு கோடி ரூபாய் கேட்பதாகச் சொல்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு நாங்கள் எங்கே போவது? இந்த புகார் காரணமாக எனது திருமண வாழ்க்கையில், எந்தப் பிரச்சனையும் இல்லை.

பணம் பறிப்பதற்காகச் இப்படி செய்கிறார்கள். இந்தப் பிரச்சனையை சட்ட ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க வனிதாவின் திருமணம் குறித்தும், பீட்டர் பாலின் முதல் மனைவி குறித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஏற்கனவே அவர் திருமணம் ஆனவர். 2 குழந்தைகள் இருக்கிறது. கணவன் மனைவி இருவருமே பிரிந்து வாழும் நிலையில், விவாகரத்து பெறவில்லை.

கல்வியும், வெளிப்பாடும் உள்ள ஒருவர் எப்படி இப்படியொரு தவறு செய்ய முடியும்? அதிர்ச்சியாக இருக்கிறது. ஏன் வனிதா பீட்டர் பால் திருமணம் நடக்கும் வரை அவரது முதல் மனைவி காத்துக் கொண்டிருந்தார்? ஏன் அவர் தடுத்து நிறுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவள் இந்த உறவில் நன்றாக இருப்பாள் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், இதுவரை பல கஷ்டங்களை அனுபவித்துவிட்டாள். அனைவருமே அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.

ஆனால், அவர் இதனை கவனிக்கவில்லை என்று நினைக்கும் போது வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

வனிதா பீட்டர் பால் திருமணம் பற்றி விவாதிப்பதை நிறுத்த முடியுமா? சட்டப்பூர்வமாக விவாகரத்து இல்லாமல், மறுமணம் செய்வதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய அவசியம் இருப்பதால் தான் டுவீட் செய்தேன்.

துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை, தந்தை மற்றும் மகனின் மரணம் போன்ற முக்கியமான பிரச்சனைகளை நான் கூறும் போது அதற்கு போதுமான அளவு பதில் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous article#தளபதி_நாளைய_அதிபதி: விஜய்யை வாழ்த்தி டிரெண்டாகும் ஹேஷ்டேக்!
Next article230 சிறப்பு தொடர்வண்டிகளை இயக்க இந்திய இரயில்வே முடிவு, பயணச்சீட்டுகளை ‘தட்கல்’ முறையில் வாங்கிக்கொள்ளலாம் என அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here