Movie Review Sandakozhi 2 | சண்டக்கோழி 2 திரைவிமர்சனம். சைடிஸ் மட்டும் தான் இருக்கு. சரக்க காணோம்.
சண்டக்கோழி 2, முதல் பாகத்துக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அவருடைய படத்தை, அவரே காப்பியடித்து இரண்டாம் பாகம் எடுத்துள்ளார். மீரா ஜாஸ்மினும், அத்தை மகள்களும் மிஸ்ஸிங்.
படத்தில் ரசிக்க வைத்த காட்சி. வயசானாலும் ராஜ்கிரண் அடிதடி மட்டும் அப்படியே இருக்கு. சைலண்டா நடிச்ச கீர்த்தி சுரேஷ், வாலு பொண்ணாக நடித்தது. மீரா ஜாஸ்மின் அளவு இல்லைனாலும் ஓகே.
முதல் பாதியே சுமார் தான். இரண்டாம் பாதியில், முதல் சீன் பார்த்ததுமே தெரிஞ்சிடுச்சு. லிங்குபாய் தியேட்டருக்கு வந்த எல்லாரையும் தரமா சம்பவம் பண்ணப் போறாருன்னு.
படத்தில் இருக்கும் எல்லா கேரக்டர்களுமே மொக்கை. எதுக்கு இவ்ளோ பேர். எதுக்கு வரலெட்சுமி, மெட்ராஸ் ஜானி பகை. தீம் மியூசிக் மட்டும் தான் இருக்கு. கன்டென்ட் மிஸ்ஸிங்.
லாஜிக் ஓட்டைலாம் இல்ல, பாதாள சுரங்கமே கட்டி வச்சிருக்காரு. அரச்ச மாவை அரைக்கலாம். அதையும் எத்தனை நாள் அரைக்க முடியும்.
அரச்சு அரச்சு, மாவு கண்ணுக்கே தெரியாம ஒரு நாள் ஆவி ஆயிடும். அப்படித்தான் இருக்கு லிங்குசாமியின் சமீபகால படங்கள்.
அஞ்சான் படத்தில் சரிந்த மார்கெட்டை, சண்டக்கோழி படத்தின் மூலம் சரி செய்வார் என நம்பிக்கையுடன் படம் பார்க்க சென்றேன். அவர் மேல் இரக்கப்பட்டதற்கு கிடைத்த தண்டனை சண்டக்கோழி 2.
லிங்குசாமி இனி தமிழ்சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதே நல்லது. நீங்க கத்துகிட்ட மொத்த வித்தையவும் திரும்ப திரும்ப இறக்குவதற்கு நாங்க தான் கிடைத்தோமா?
சண்டைகோழி 2 – சைடிஸ் மட்டும் தான் இருக்கு. சரக்க காணோம்.