Home சிறப்பு கட்டுரை கருப்பு வெள்ளிக்கிழமை (Black Friday) பற்றி தெரியுமா?

கருப்பு வெள்ளிக்கிழமை (Black Friday) பற்றி தெரியுமா?

657
0
Black Friday Tamil கருப்பு வெள்ளிக்கிழமை பற்றி தெரியுமா?

கருப்பு வெள்ளிக்கிழமை (ப்ளாக் பிரைடே) மற்றும் தேங்க்ஸ் கிவிங் டே பற்றி தெரியுமா? Black Friday and Thanksgiving Day in Tamil. வாம்ப்போனங் (Wampanoag) பில்கிரிம் (Pilgrims) இனத்தின் மோதல்

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை ப்ளாக் ஃப்ரைடே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலக அளவில் அதிகமான பொருட்கள் விற்பனையாகும்.

ரோஸ் டே முதல் கிஸ் டே வரை புல் அப்டேட் காதலர் தினம் ஸ்பெஷல்

நம்ம ஊர் ஆடித் தள்ளுபடி ஆப்பர்களை விட பன்னாட்டு நிறுவனங்கள், ப்ளாக் ப்ரைடே அன்று ஆப்பர்களை அள்ளிவீசும்.

கருப்பு என்பது துக்கத்தை குறிக்கும் நிறம். சந்தோசமான வெள்ளிக்கிழமையை ஏன் கருப்பு வெள்ளிக்கிழமை என பெயரிட்டுள்ளனர்?

ப்ளாக் ப்ரைடே பற்றி அறிந்துகொள்ளும் முன், Black Friday இது ஏன் கொண்டாப்படுகிறது? தேங்க்ஸ் கிவிங் டே (Thanksgiving Day) என்றால் என்ன? என்று பார்ப்போம்.

தேங்க்ஸ் கிவிங் டே (Thanksgiving Day Tamil)

நவம்பர் நான்காவது வியாழன்கிழமை ‘தேங்க்ஸ் கிவிங் டே‘ கொண்டாடப்படுகிறது. இதற்கு அடுத்த நாள் ப்ளாக் ப்ரைடே கொண்டாடப்படுகிறது.

வாம்ப்போனங் (Wampanoag) பில்கிரிம் (Pilgrims) இனத்தின் மோதல் Thanksgiving Day Tamil

இரண்டாயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, வாம்ப்போனங் (Wampanoag) என்ற இனம் வடஅமெரிக்காவில் வசித்து வந்தது. இவர்கள் அமெரிக்காவில் குடியேறிய, இந்தியப் பழங்குடியினர்

வாம்போனங் இனத்தில் முச்சகோதரிகள் (Three sister) என்று அழைக்கப்பட்ட மூன்று பெண்கள் இருந்தனர். இவர்கள் தான் அமெரிக்காவிற்கு விவசாயத்தை அறிமுகம் செய்தது. இந்த நாகரிகம் கிமு 800-களில் கனடாவில் முதலில் துவங்கியது.

அந்த காலகட்டத்தில் வாம்ப்போனங் இன மக்கள் அம்மை நோயால், அளவுக்கு அதிகமாக உயிரிழந்து கொண்டிருந்தனர். அச்சமயத்தில் பில்கிரிம் (Pilgrims) என்ற இனத்தவர் அங்கு நுழைகின்றனர்.

பில்கிரிம் இனத்தின் வேலையே, போகும் வழியில் கிடைத்ததை சுருட்டிக்கொள்வது. இவர்கள் ஐரோப்பியர்கள். எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள். வாம்ப்போனங் இனத்தவரின் உடமைகளையும், பொருட்களையும் கொள்ளையடித்து கொள்கின்றனர்.

ஏற்கனவே, நோயால் பாதிக்கப்பட்ட வாம்ப்போனங் இனத்தினர் தற்பொழுது, உணவு இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வாம்ப்போனங் இனம் தொடர்ந்து பில்கிரிம் இனத்தால் பாதிப்புக்குள்ளானது.

இதை முடிவுக்கு கொண்டுவர, பில்கிரிம் இனத்தவருடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டனர் வாம்ப்போனங் இனத்தினர்.

வருடா வருடம் முதல் அறுவடை நாளில், ஒரு பங்கை பில்கிரிம் இனத்தவருக்கு விருந்தாக படைத்தனர். பின்னாளில் இதுவே ‘தேங்க்ஸ் கிவிங் டே’வாக மாறியது.

வான்கோழியின் இறைச்சி

1621-ம் ஆண்டு அமெரிக்காவில், முதல் தேங்க்ஸ் கிவிங் டே விருந்து கொண்டாடப்பட்டது. அதில் வான்கோழியின் இறைச்சி முக்கிய இடம்பிடிக்கும்.

எனவே வான்கோழிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இதற்கு தேங்க்ஸ் கிவிங் டே என பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது.

அமெரிக்காவில், நவம்பர் நான்காவது வியாழக்கிழமை தேங்க்ஸ் கிவிங் டே கடைபிடிக்கப்படுகின்றது. கனடாவில் அக்டோபர் இரண்டாம் திங்கள்கிழமை கடைபிடிக்கப்படுகின்றது.

1789-ல் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன், தேங்க்ஸ் கிவிங் டே நாளை அதிகாரப்பூர்வ கொண்டாட்டமாக நடைமுறைக்கு கொண்டுவந்தார்.

தோராயமாக 250 வருடங்கள் கழித்து ஆபிரகாம் லிங்கன், தேங்க்ஸ் கிவிங் டே நாளை அமெரிக்காவின் அரசு விடுமுறை தினமாக அறிவித்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இணையாக தேங்க்ஸ் கிவிங் டே கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் தாத்தா கதை உருவான வரலாறு!

ப்ளாக் ப்ரைடே (Black Friday Tamil)

தேங்க்ஸ் கிவிங் டேவிற்கு மறுநாள், நவம்பர் நான்காவது வெள்ளிக்கிழமையில் அமெரிக்க மக்கள் புதிய பொருட்கள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டனர்.

கடை வீதிகள் மற்றும் நகர்புறம் இந்த நாளில், கூட்ட நெரிசலுடன் காணப்படும். எனவே, சாலைவிபத்து மற்றும் கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர். இதை நினைவு கூறும் விதமாக ‘ப்ளாக் ப்ரைடே’ எனப் பெயரிடப்பட்டது.

கிறிஸ்துமஸ் நட்சத்திரம் உண்மையா? கிரேட் கன்ஜெக்சன் என்றால் என்ன? இயேசு பிறந்த வரலாறு

மேலும், மக்கள் நிறைய பொருட்களை வாங்க ஊக்குவிக்கும் விதமாக, வணிகர்கள் சலுகைகள் வழங்க ஆரம்பித்தனர். உலகிலேயே அதிகமாக பொருட்கள் விற்பனையாகும் நாள் என ப்ளாக் ப்ரைடே  (black friday) என வரலாற்றில் இடம்பிடித்தது.

நம்ம ஊரில் ஆடித்தள்ளுபடி போல் அமெரிக்காவில் ப்ளாக் ப்ரைடே மிகவும் பிரபலம். இது அமெரிக்காவில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் அறிமுகமாகி விட்டது. அமேசான் நிறுவனம் சென்ற ஆண்டு இந்தியாவில் ஏகப்பட்ட ஆப்பர்களை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

3
Previous articleGaja Puyal – பழனிச்சாமி உஷ்… ஸ்டாலின் டோஷ்….
Next articleபெட்ரோல் 1 ரூபாய் மட்டுமே! நள்ளிரவு முதல் அமல்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.