Raghava Lawrence Daughter; ராகவா லாரன்ஸுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம்! ராகவா லாரன்ஸூக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று பலரும் வியப்புடன் பார்க்கும் அளவிற்கு அவரது மகள் வளர்ந்து நிற்கிறார்.
ராகவா லாரன்ஸின் மகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். ஒரு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.
எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டனவர். ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை Lawrence Charitable Trust சார்பில் ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
குழந்தைகளின் மருத்துச் செலவு, உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்தல், திருநங்கைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பது என்று எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறார்.
தற்போது கூட கொரோனா பாதித்தவர்களுக்கு உதவும் வகையில் ரூ.3 கோடி கொடுத்துள்ளார். மேலும், உதவுவதற்கு ரெடியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக வரும் 14 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட இருக்கிறார்.
இந்த நிலையில், அவரது மகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு தெரிந்த அவரது மகளின் புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கும், உலகிற்கும் தெரிந்துள்ளது.
அதுவும் இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று அனைவருமே வியப்புடன் பார்க்கின்றனர். ராகவா லாரன்ஸின் மகளது பெயர் ராகவி என்பது குறிப்பிடத்தக்கது.