சைரா காது ரா CYBIRA ( Cyber security interactive robotic agent ! Police Robo). சைபீரா பற்றி தெரியுமா? இப்படி தான் என் நண்பன் என்னிடம் கேட்டான்?
சில வருடங்களுக்குப் பிறகு எனது நண்பன் அர்ஜுன் ரெட்டியை ஒரு உணவகத்தில் சந்தித்தேன். நானும் அர்ஜுனும் ஒன்றாக எஸ்.ஏ.பி பயின்றோம். அவன் அதே துறைக்கு வேலைக்கு சென்று விட்டான் நானோ…. அது என்னத்துக்கு இப்போ அத விட்ருவோம் .
நானும் அவனும் உரையாடுகையில் சைபீரா தெரியுமா என்று கேட்க, நானோ “ஏன் தெரியாது? உங்க சிரஞ்சீவி காரு நடிச்சிருக்காரு, ராம்சரண் ப்ரொடியூசர, நயன்தாரா , அனுஸ்கா, எல்லாம் நடிச்சப் படம்… பீரியட் மூவி, எங்க விஜய சேதுபதி கூட நடிச்சிருக்காரு, தலைவி தமன்னா கூட…” இப்படி மூச்சு விடாம பேசும்போதே தலையில கைய வெச்சுட்டான்..
அடே சைரா காது ரா, சைபீரா என்று சலித்துக்கொண்டு…. விஷயத்தை விவரித்தான் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் வட்டம், மஹாராணிப்பேட்டாவில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒரு புதிய போலீஸ் காரரை நியமித்துள்ளனராம் .
அந்த போலீஸ் அதிகாரி பதி மூன்று கேமிரா, 500 ஜீபி மெம்மரி கொண்டுள்ளாராம் என்ன குழம்பி விட்டீர்களா? ஆம் அந்த அதிகாரி பெயர் தான் CYBIRA! (Cyber security interactive robotic agent ! Police Robo).
அவர் ஒரு எந்திரன்!
காவல் நிலையத்திற்கு புகார் கொண்டு வருபவரிடம் தகவல்களை பெற்று , அவருடைய உயர் அதிகாரிக்கு அனுப்புவது.
360 டிகிரி கோணத்தில் தலையைத் திருப்பி படம் பிடித்து அங்க அடையாளங்களை பதிந்துகொள்வது, பட்டியலில் உள்ள தேடப்படும் குற்றவாளிகளைக் கண்டால் தகவல் தெரிவிப்பது என்று அனைத்து வேலைகளைகளையும் செய்வார் இந்த சைபீரா!
இதுவரை சுமார் 150 வழக்குகளுக்கு மேல் பதிந்து அதற்கான அத்தாட்சியை வழங்கியுள்ளார் அவர். இந்த வரவேற்கத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது நம் இந்தியாவில் என்பது கூடுதல் பெருமை .
எந்திர காவலாளியை தயாரித்தது ரோபோ கோபிலர் என்கிற தனியார் நிறுவனம்.
இந்த தகவலைக் கூறிவிட்டு விடைபெறும் வேளையில் “இந்த சினிமா பித்த குறைச்சாத்தான் உறுப்புடுவ“ என்று சுந்தரத் தமிழில் சொல்லிவிட்டு போனான் .
அது கூட எனக்கு வருத்தமில்லை தலைவி தமன்னாவையும் சேத்து திட்டிட்டு போயிட்டான், அதான் மனசு வலிக்குது.
சா.ரா.