Sandy Corona Song; சீனாக்காரன் சாப்டதுக்கு நாங்க கைய கழுவணுமா? சாண்டி பாடிய பாடல்! நடிகரும், பாடகரும், டான்ஸ் மாஸ்டருமான சாண்டி பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பற்றி சாண்டி பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனாவால் சினிமா பிரபலங்கள் முதல் அப்பாவி ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை வந்துவிட்டது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எங்கிருந்து வந்ததோ, அங்கு சகஜ நிலை திரும்பி வருவதாக கூறப்படுகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலேயே இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் அப்பாவி ஜனங்கள் ஒருபக்கம், சகட்டுமேனிக்கு வீடியோ வெளியிட்டு வரும் பிரபலங்கள் ஒரு பக்கம்.
வேலையில்லாமல் இருப்பவர்கள் எத்தனையோ பேர். இப்படியே காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர், டான்ஸ் மாஸ்டர், பாடகர், பிக் பாஸ் சாண்டி கொரோனா பற்றி பாடிய பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் (Ennanga Nadakkudhu Naatula).
அதில், பச்சக்கறிய பச்சையா தின்னா அதுக்கு பேரு கொரோனா…
கொச்ச கொச்சனு காலி பண்ண இந்தியா உள்ள வர்றானா..
நிலவேம்பு கசாயம்
அத குடிக்கணும் கட்டாயம்
நம்ம கையதான் கழுவணும்…
ஆல்டைம் ப்ரெஷாதான் இருக்கணும்..
ஹலோ ஹலோ என்னங்க நடக்குது நாட்டுல
அய்யோ அய்யோ ஆளே இல்ல ரோட்டுல
பிரச்சனையை பேஷ் பண்ணு, உன் கைய கால வாஷ் பண்ணு
சாண்டி பையன் சொல்லுறத கேளு கண்ணு
அந்த கொரோனாவா காலி பண்ணு
சீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கைய கழுவனுமா?
நீங்க பண்ண பாவத்துக்கு நாங்க பயந்து நடுங்கணுமா?
கும்பலாக சுத்தாதீங்க..கூட்டத்துல நிக்காதீங்க..
அரசாங்கம் பேச்ச கேட்டு வீட்டிலேயே ரெஸ்ட் எடுங்க..
ப்ளீஸ் ஸ்டே ஹோம்…என்று சாண்டி பாடியுள்ளார்.
இந்த பாடல் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.