சூரரை போற்று ஓடிடி தளத்தில் வெளியான தமிழ் படங்களில் தரமான படம் என்ற சிறப்பை பெற்றுவிட்டது. Soorarai Pottru OTT Review. சூரரை போற்று திரை விமர்சனம்.
இதுவரை ஒடிடி தளங்களில் எத்தனையோ தமிழ் படங்கள், திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே நேரடியாக வெளியாகி உள்ளன.
ஆனால் ஒரு பெரிய நடிகரின் படம், ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் இயக்குனரின் படம் தில்லாக திரையரங்கை புறக்கணித்து அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்தப்படம் தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாகி இருந்தாலே வசூலை வாரிக்குவித்து இருக்கும். ஆனால் அதை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் கம்பீரமாக ஓடிடி மூலம் வெளியாகி உள்ளது.
நாம தியேட்டருக்கு போகாம, தியேட்டரே நம்ம வீட்டு பெட்ரூம் உள்ள வந்தா எப்படி இருக்கும் அப்படி தான் நமக்கும், சூரரை போற்று படம் பார்க்க சர்ப்ரைசா இருந்திச்சு.
சூரரை போற்று படம் எப்படி இருக்கு? soorarai pottru review
கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாறு பற்றிய படம் தான் சூரரைப்போற்று என்பது ஏற்கனவே வெளியான கதை.
ஆனால், அக்கதைக்குள் இப்படி ஒரு பரபரப்பை புகுத்திய பெருமை சுதா கொங்கராவையே சேரும்.
படம் ஆரம்பித்தது முதலே டாப் கியரில் செல்கிறது. லவ் ரொமான்ஸ் ஒரு பக்கம். கண்ணீர் வரவைக்கும் சென்டிமென்ட் ஒரு பக்கம் என நம்மை திக்குமுக்காட வைக்கிறது கதை.
ஒருவன் தொடர்ந்து ஒரு தொழிலை செய்து தோல்வி அடைந்துகொண்டே இருந்தால், விடாமல் முயற்சித்தால், நிச்சயம் வெற்றி உண்டு என்னும் தன்னம்பிக்கையை கொடுக்கிறது.
crowdfunding மூலம் ஏரோப்ளேன் கூட வாங்கலாம் என ஜி.ஆர்.கோபிநாத் நமக்கு உணர்த்தி விட்டார்.
உண்மைக் கதை என்ன?
சூரரை போற்று ஒரு பக்கா என்டர்டைன்மென்ட் படம். ஆனால் படத்தில் வரும் அனைத்தும் உண்மையா? இல்லை?
பொதுவாக வாழ்க்கை வரலாற்றை அப்படியே எடுப்பது ஒரு ரகம். கதையின் அம்சமும் அப்படியே இருக்க வேண்டும், வசூலும் வாரிக்குவிக்க வேண்டும் என எடுப்பது இரண்டாவது ரகம்.
கதையை வைத்து உல்டா பண்ணி கல்லாக்கட்ட வேண்டும் என்று நினைப்பது மூன்றாவது ரகம்.
சூரரைப்போற்று இதில் மூன்றாவது ரகத்தை பிடித்து உள்ளது. கதையில் உண்மை இருந்தாலும், நிறைய விஷயங்கள் தமிழ் நாட்டிற்காக மாற்றப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் உள்ளவரை மதுரைக்காரர் என்று சொன்னது கூட ஓகே? ஒரு அய்யங்காரை பெரியாரியவாதி என ஓவர் பில்டப் கொடுத்தது நம்ம ஊரு அரசியல்வாதிகளை மிஞ்சி விட்டார் சுதா.
அர்னால்ட் நடித்த டெர்மினேட்டர் ரோபோவுக்கு தமிழ் நாட்டில் பட்டை அடித்து ஆயுத பூஜை கொண்டாடியது போன்று உள்ளது. உண்மை கதைதான் அதுக்குன்னு ஒரு நியாயம் வேணாமா?
ஒடிடி தளங்களின் புரட்சி soorarai pottru movie amazon prime
கொரோனா பண்ணின நல்ல விசயத்துல ஒன்னு இந்த ஓடிடி தளங்களின் எழுச்சி. இனி படத்தை விமர்சனம் பார்த்துட்டு தான் தியேட்டருக்கு போயி பார்க்கணும் என்பதில்லை.
ஊருல ஒரு தியேட்டரோ, ரெண்டு தியேட்டரோ தான் இருக்கும். அதுல எப்படா சின்ன பட்ஜெட் தரமான படங்கள் வெளியாகும் என ஏங்க வேண்டியதில்லை.
பெரிய ஹீரோக்கள் படம் வெளியானால் 1000 ரூபாய் டிக்கெட் என்றாலும் வாங்கிப் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை.
வரிசையில நிக்க வேண்டாம், ஸ்கூல் காலேஜ் கட் அடிக்க வேண்டாம், வேலைக்கு லீவ் போட வேண்டாம். இருந்த இடத்துல இருந்தே கிடைக்குற கேப்புல படத்தை பார்த்து முடிச்சிடலாம்.
amazon prime
அமேசான் வருசத்துக்கு 999 மட்டுமே. ஹாட் ஸ்டார் 399 தான் அதுவும் ஜியோ பிரிபெய்டு ரீசார்ஜ் பண்ணும் போதே ஆப்பர் உண்டு. கொஞ்சம் காஸ்ட்லி நெட்பிலிக்ஸ் மாசம் 199.
சன் நெக்ஸ்ட், ஜீ 5 இப்பிடின்னு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வெரைட்டி இருக்கு. உங்களுக்கு எது எல்லாம் சவுகரியமோ ரீசார்ஜ் பண்ணிட்டு படத்த பாத்துக்கலாம்.
தீபாவளி அன்னிக்கு எல்லோரும் ஹாட் ஸ்டாரில் சந்திப்போம் ஐஅம் வெயிட்டிங் லேடி சூப்பர் ஸ்டாரின் மூக்குத்தி அம்மன்.
soorarai pottru download online என இதுக்குமேலயும் சர்ச் பண்ணுனீங்கன உங்கள திருத்தவே முடியாது!