Home சிறப்பு கட்டுரை கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாறு – Gopinath Biopic

கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாறு – Gopinath Biopic

717
1
கேப்டன் கோபிநாத் Captain Gopinath Biopic சூரரைப்போற்று படத்தின் கதை Simply Fly: A Deccan Odyssey

கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாறு (Captain Gopinath Biopic). சூரரைப்போற்று படத்தின் கதை Simply Fly: A Deccan Odyssey நாவலை தழுவியது.

கேப்டன் கோபிநாத் வரலாறு Captain Gopinath Biopic 

இந்திய நாட்டின் ராணுவத்திலும் இந்திய விமான போக்குவரத்தின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றிய ஒரு உன்னத மனிதரின் வாழ்க்கையைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

கோருர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கோருர் என்னும் சிறிய கிராமத்தில் தன்னுடைய பெற்றோரின் எட்டில் இரண்டாவது குழந்தையாக பிறந்தவர்.

இவருடைய தந்தை பள்ளி ஆசிரியர் சிறு வயதில் இருந்தே தந்தையிடம் நிறைய விஷயங்கள் கேட்டுத் தெரிந்து வந்துள்ளார். 1962-ஆம் ஆண்டு பிஜாபூர் பள்ளிக்கு நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வில் தேர்ச்சி அடைந்தார்.

இந்தப் பள்ளி அவருக்கு NDA நுழைவுத்தேர்வை தேர்ச்சி செய்ய உதவிகரமாக இருந்தது. பின் இந்தியா ராணுவத்தில் சேர்ந்து கேப்டன் ஆகி 8 ஆண்டுகள் பணி புரிந்தார்.

மேலும் 1971-இல் நடந்த இந்தியா பங்களாதேஷ் விடுதலைப் போரிலும் பங்கேற்றுள்ளார். தன்னுடைய 28 வயதில் உடல் தகுதியற்றதால் ஓய்வு பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

விவசாயத்தில் தன்னுடைய பங்களிப்பை தொடர நினைத்து பட்டு வளர்ப்பு பண்ணை வைத்து அதை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ததால் 1996-ஆம் ஆண்டு ரோலெக்ஸ் லாரியத் அவார்ட் அவருக்குக் கிடைத்தது.

மிகவும் எளிதாக இது அவருக்கு கிடைத்து விடவில்லை. பல வருடங்கள் இரவு பகலாக உழைத்து விவசாய பண்ணையில் தங்கி முழுதுமாக அதைக் கற்று பின்னரே விவசப்பண்ணை அமைத்தாராம்.

இதுபோக உடுப்பி ஹோட்டல் தொழிலும் ஈடுபட்டார். பட்டுப் பண்ணை தொழிலில் கிடைத்த லாபத்தில் ஹோட்டலில் முதலீடு செய்து தொழிலைப் பெருக்கினார்.

1997-ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் சேவை செய்து வந்த டெக்கான் ஏவியேஷன் கம்பெனியுடன் சேர்ந்தார்.

பின்னர் தனியாக ஏர் டெக்கான் (Air Deccan) என்ற மிகக் குறைந்த விலையில் அனைவரையும் பறக்க வைக்கும் முயற்சியுடன் தொடங்கினார்.

அதாவது இந்தியாவில் இருக்கும் நடுத்தர மக்கள் அனைவரையும் குறிப்பாக ரயிலில் நாள் கணக்காக பயணம் செய்வோரையும் விமானத்தில் குறைந்த விலையில் பறக்கவைப்பதே இவரின் நோக்கமாக இருந்தது.

இதில் கிடைத்த பெரும் பணத்தைக்கொண்டு கன்னடா நடிகர் ராஜேஷ் அவர்களுடன் சேர்ந்து அரசியலில் இறங்கினார்.

அந்தத் தருணத்தில் அவர் சென்று வந்த சீனப் பயணமே அவருக்கு விமானத்துறையில் கால் பதிக்க உந்துக்கோளாக அமைந்தது.

ஏர் டெக்கான் நிறுவனம் நல்ல வளர்ச்சி நிலையில் இருக்கும்பொழுது அவர்களிடம் 43 விமானங்களும் ஒரு நாளைக்கு 350 பயணங்களும் 61 இடங்களுக்கு பயணம் செய்து வந்துள்ளன.

2006-ஆம் ஆண்டு மிக உயரந்த தனி மனித விருதான “செவலியர் டி ல லேஜின் டி’ஹானர்” “Chevalier de la Legion d’Honneur” விருதை ஃபிரெஞ்சு நாடு அவருக்கு வழங்கி சிறப்பித்தது.

2007-ஆம் ஆண்டு இந்த நிறுவனம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்த பொழுது விஜய் மல்லையா அவர்கள் பெரும்பான்மையான இதன் பங்குகளை வாங்கினார். இதன் மூலம் இந்த நிறுவனம் கிங்ஃபிஷர் நிறுவனத்துடன் இணைந்தது.

பிறகு 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த லோக் சபா தேர்தலில் பங்கேற்று அது அவருக்கு தோல்வியில் தான் முடிந்தது.

சூரரைப்போற்று படத்தின் கதை

இவ்வாறு பல்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு துறைகளில் கோபிநாத் கால்பதிக்க எப்படி முடிந்தது?

இந்தியா விமானத்துறையின் வளர்ச்சியில் தனக்கென்று ஒரு பெயரை எப்படி நிலைநிறுத்தினார்?அவருடைய கடினமான காலங்களில் அவருக்கு துணை நின்றவர்கள் யார்?

இதை அனைத்தையும் தெரிந்து கொள்ள 2010-ஆம் ஆண்டில் கேப்டன் கோபிநாத் எழுதிய Simply Fly: A Deccan Odyssey நாவலை படித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் அவர் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து சூரரைப்போற்று என்ற படமும் வெளிவர உள்ளது. சூரரைப்போற்று படத்தின் கதை கேப்டன் கோபிநாத் பற்றியது தான்.

Previous articleசூரரைப்போற்று: விமானத்தில் விளம்பரம் செய்யக் காரணம்?
Next articleseeman video leak: சீமான் வீடியோ – அந்த பெண் யார்?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here