Home சினிமா கோலிவுட் Soorarai Pottru Update; அஜித்துக்கு பர்த்டே ட்ரீட் மிஸ்ஸிங்

Soorarai Pottru Update; அஜித்துக்கு பர்த்டே ட்ரீட் மிஸ்ஸிங்

0
415

Soorarai Pottru Update; அஜித்துக்கு ட்ரீட்  சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தை அஜித் பிறந்தநாளுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

காப்பான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் விதமாக சூரரைப் போற்று உருவாக்கப்பட்டுள்ளது.

Soorarai Pottru Update

சுதா கொங்கரா சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சூரயாவுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், விவேக் பிரசன்னா.

காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சூர்யா மற்றும் குனீத் மோங்கா இருவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த மாதத்தின் 2ஆவது வாரத்தில் சூரரைப் போற்று படத்தின் இசை வெளியீடு நடக்க இருக்கிறது. இதையடுத்து, வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தேதியில்தான் விஜய்யின் மாஸ்டர் படமும் திரைக்கு வருகிறது.

சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் சூரரைப் போற்று சிறந்த படமாக கருதப்படுகிறது. ஏனென்றால், முதல் முறையாக இந்தப் படம் டப்பிங் செய்யப்பட்டு கன்னட மொழியில் வெளியாக இருக்கிறது. மேலும், ஹிந்தியிலும் சூரரைப் போற்று ரீமேக் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டது.

அஜித் பிறந்தநாள் சூரரைப் போற்று ரிலீஸ்

இந்த நிலையில், வரும் மே 1 ஆம் தேதி சூரரைப் போற்று படம் திரைக்கு வரயிருப்பதாக கூறப்படுகிறது. தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி 49ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அதனை சிறப்பிக்கும் வகையிலும் அஜித்திக்கு ட்ரீட் கொடுக்கும் வகையிலும், சூர்யாவின் சூரரைப் போற்று வரும் மே 1 ஆம் தேதி வெளியிட முடிவு செய்தனர்.

ஆனால் லாக்டவுன் காரணமாக தற்பொழுது முடியாமல் போய் விட்டது. இதனால் அஜித் ட்ரீட் மிஸ்ஸிங் ஆகிவிட்டது.

அருவா அப்டேட்

சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சூர்யா மீண்டும் இயக்குநர் ஹரி உடன் 6 ஆவது முறையாக இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு அருவா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதையடுத்து, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அருவா படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார். அனல் அரசு சண்டைக்காட்சிகள் அமைக்கிறார்.

இரு சகோதரர்களுக்கு இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக இருக்கிறது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளைச் சுற்றிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here