SLvsWI 2nd ODI; தொடரை வென்றது இலங்கை அணி. SLvsWI 2nd ODI ஸ்ரீ லங்கா சிறப்பான பேட்டிங், மேற்கு இந்திய தீவுகள் அணி சொதப்பல்
பிப்.26 : இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி மூன்று ஒருநாள் மறறும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
SLvsWI 2nd ODI ஸ்ரீ லங்கா சிறப்பான பேட்டிங்
இரண்டாவது போட்டி இன்று ஹம்பாந்தோட்டாவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 345ரன்கள் குவித்தது, இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ 127ரன்களும், குசால் மென்டிஸ் 119 ரன்களும் குவித்தனர். மேற்கு இந்திய அணி தரப்பில் காட்ரேல் 4விக்கெட்டும் அல்சரி ஜோசப் 3விக்கெட்டும் வீழ்த்தினர்.
மேற்கு இந்திய தீவுகள் அணி சொதப்பல்
346ரன்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மேற்கு இந்திய தீவுகள் அணி நல்ல தொடக்கத்துடன் முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தனர்.
முதல் விக்கெட் விழுந்தவுடன் மேற்கு இந்திய தீவுகள் அணி விக்கெட்டுகள் சரிய தொடங்கின. 39.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டும் விழுந்து 181ரன்கள் மட்டுமே எடுத்து 161 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது.
மேற்கு இந்திய தீவு அணியில் விக்கெட் கீப்பர் சாய் ஹோப் மட்டுமே சமீப காலமாக நன்றாக ஆடி வருகிறார். வேறு யாரும் சொல்லிக் கொள்ளும்படி விளையாடுவதே இல்லை.
கடந்த சில வருடங்களாகவே மேற்கு இந்திய தீவு அணி ஒருநாள் போட்டியில் வெற்றி பெரும் அளவுக்கு விளையாட தவறி வருகிறது.
இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இரண்டு போட்டியில் தோற்று தொடரை இழந்தது.
ஆட்டநாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோ பெற்றார்.
மேற்கு இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி பெரும் மிகப்பெரிய வெற்றியாகும்.
இதற்கு முன்பு 2007 ஆம் ஆண்டு புரேவிடன்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் 113ரன்களுக்கு வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கடைசி ஒருநாள் போட்டி பல்லிக்கல்லே வில் இந்திய நேரப்படி மதியம் 2.30மணிக்கு தொடங்கிறது.