Home சினிமா கோலிவுட் சூரியாவின் படத்தலைப்பு திடீர் மாற்றம்; இயக்குனர் பயந்தது எதற்கு?

சூரியாவின் படத்தலைப்பு திடீர் மாற்றம்; இயக்குனர் பயந்தது எதற்கு?

283
0
சூரியாவின் படத்தலைப்பு அருவா? சூரரைப்போற்று

சூரியாவின் படத்தலைப்பு திடீர் மாற்றம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே மாதிரியான தலைப்புகள் உள்ளதால் குளறுபடி.

சூரரைப்போற்று

சூரியா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் சூரரைப்போற்று. இந்த படம் பாடல்கள் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வரும் படம் சூரரைப்போற்று. இந்நிலையில் சூரியாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது.

அருவா?

ஹரி-சூரியா படங்களில் எல்லாம் செண்டிமென்ட் கட்சியாக அருவா சண்டை இடம்பெறும். இம்முறை படத்தலைப்பே அருவா எனப்பெயரிடப்பட்டு உள்ளது. தற்பொழுது இந்த தலைப்பு மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அருவா சண்டை, அருவா வேலு என படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இயக்குநர் ஏகாதசி அவர்களின் படம் ‘அருவா’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

எனவே சூர்யாவின் அருவா படத்தலைப்பு மாற்றப்படலாம் அல்லது ஏகாதசியுடன் சுமூக பேச்சுவார்த்தை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleநமக்கு எதிரி வெளிய இல்ல கூடவே இருக்கான்; ஐ‌பி‌எல் தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு
Next articleஇந்திய லெஜெண்ட் அணி திரில் வெற்றி – சச்சின் சேவாக் ஏமாற்றம்.
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here