Thala Ajith Bike Travel From Hyderabad; ஹைதரபாத் டூ சென்னை: 600 கி.மீ. பைக்கிலேயே வந்த தல அஜித்! ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு கிட்டத்தட்ட 600 கி.மீ தூரம் பைக்கிலேயே அஜித் வந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி வருகிறது.
அஜித் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு 600 கிமீ தூரம் பைக்கிலேயே பயணம் செய்து வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரம் தல அஜித். இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல. பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபர், சமையலில் வித்தகர், ஒரு மெக்கானிக், பைலட் லைசன்ஸ் பெற்றவர், துப்பாக்கி சுடும் திறமை கொண்டவர் என்று பல திறமைகளைக் கொண்டுள்ளார்.
இன்றைய இளைஞர்களுக்கு அஜித் ஒரு ரோல் மாடலாகவும் திகழ்கிறார். அவரது தன்னம்பிக்கை, விடா முயற்சி ஆகியவற்றால் புகழின் உச்சிக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், அஜித் ஹைதராபாத்திலிந்து சென்னைக்கு கிட்டத்தட்ட 600 கிமீ தூரம் பைக்கிலேயே கடந்து வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.
ஏன் அப்படி செய்தார்? எதற்காக என்று கேள்வியும் வரும் நிலையில், வலிமை படத்திற்காக அப்படி செய்துள்ளார்.
ஆம், இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 60ஆவது படம்.
போலீஸ் கதையை மையப்படுத்தி இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
அண்மையில், சென்னையில் நடந்த வலிமை படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பின் போது அஜித் பைக் ரேஸ் செய்த வீடியோ, புகைப்படங்கள் வெளியானது. ஆனால், அதற்கு முன்னதாக முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
அங்கு அஜித் பைக் ஓட்டும் காட்சியை படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். படப்பிடிப்பின் கடைசி நாளில், காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிந்தவுடன் அஜித்துக்கு சென்னை திரும்ப விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதனை ரத்து செய்யும்படியும், தான் சென்னைக்கு பைக்கிலேயே செல்வதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்ட அவரது உதவியாளர்கள் கொஞ்சம் பயந்துள்ளனர்.
ஆனால், தல அஜித் பைக் ரேசர் என்பதால், சிட்டா பறந்து வந்துள்ளார். அதுவும், 600 கிமீ தூரம் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்துள்ளார்.
இது நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக ஆன நிலையில், தற்போது தான் அஜித்தின் பைக் ரேஸ் தகவல் வெளியாகி வருகிறது.
இது போன்று இன்னும் எத்தனையோ தகவல்கள் வெளியாகாமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.