Vishnu Vishal Next Mohan Das Poster; மோகன் தாஸ் போஸ்டர் வெளியீடு: ரத்தக் கறையுடன் விஷ்ணு விஷால்! விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன் தாஸ் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
மோகன் தாஸ் பட டைட்டில் டீசர் வெளியான பிறகு மோகன் தாஸ் படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தபடியே விஷ்ணு விஷால் தான் நடிக்கும் மோகன் தாஸ் பட வேலைகளை கவனித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
தற்போது, காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எஃப்.ஐ.ஆர்., இன்று நேற்று நாளை 2 ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார்.
இந்த நிலையில், இப்படங்களைத் தொடர்ந்து ஏப்ரல் 11 ஆம் தேதி புதிய படத்தில் நடிக்க இருந்தார்.
ஆனால், கொரோனா காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதோடு, ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்த நிலையில், படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
விஷ்ணு விஷால் தான் நடிக்கும் புதிய படத்திற்கு மோகன் தாஸ் Mohan Das என்று டைட்டில் வைத்துள்ளார்.
இந்தப் படத்தை களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார். விஷ்ணு விஷாலே தனது விவி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
மேலும், மோகன் தாஸ் படத்தின் டைட்டில் டீசரை Mohan Das Title Teaser வெளியிட்டுள்ளார். அதில், கையில் சுத்தியுடன் யாரோ ஒருவரை கொலை செய்வது போன்று காட்டியுள்ளார்.
ஆக்ஷன், த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்திற்கு மோகன் தாஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மோகன் தாஸ் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த டைட்டில் டீசரில் விஷ்ணு விஷால் ஆக்ரோஷமாக கையில் சுத்தி வைத்துக் கொண்டு யாரையோ கொலை செய்வது போன்று காட்டப்பட்டுள்ளது.
மேலும், ரத்தக்கறையுடன் படிக்கட்டில் ஏறிச் செல்லும் அவர் வாஷிங் மெஷினில் தனது ரத்தைக் கறை டீசர்ட்டை கழற்றி போடுகிறார்.
மோகன் தாஸ் பட டீசர் இறுதியில், இது உண்மைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மோகன் தாஸ் பட டீசரை பார்க்கும் போதே பயமாக இருக்கிறது. படம் திரைக்கு வந்தால் சும்மா ரசிகர்களை அதிர வைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டில் இருந்தபடியே தனது அடுத்தபடத்தின் அறிவிப்பை பட டீசரோடு வெளியிட்ட விஷ்ணு விஷாலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மோகன் தாஸ் டைட்டில் டீசர் வெளியானதைத் தொடர்ந்து மோகன் தாஸ் படத்தின் புதிய போஸ்டர் Mohan Das Poster ஒன்றை விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார்.
இந்தப் போஸ்டரில் விஷ்ணு விஷால் கண்ணாடி அணிந்துள்ளார். மேலும், உடல் முழுவதும் ரத்தக் கறையுடன் தோற்றமளிக்கிறார்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படத்தின் டைட்டில் இருப்பது போன்று இரு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மோகன் தாஸ் டைட்டில் டீசர், #MOHANDAS #VishnuVishalsNEXT என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
Vishnu Vishal Released his Next Mohan Das Movie Poster Today..