Keerthy Suresh; அடக்கம் ஒடுக்கத்துக்கு பேர் போன கீர்த்தி சுரேஷ்: #WeLoveKeerthySuresh டிரெண்டிங்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் எப்போதும் ஒரே மாதிரியாக நடித்து வருகிறார்.
பிகினி, கிளாமர், நிர்வாணம் இவையின்றி சினிமாவில் கால் பதித்து வருகிறார்.
சினிமாவைப் பொறுத்தவரை கொஞ்சம் கிளாமர், கொஞ்சம் அழகு உள்ள நடிகைகளுக்கு தான் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. கிளாமர் ரோலுக்கு மறுக்கும் நடிகைகளுக்கு வாய்ப்புகளும் மறுக்கப்படுகிறது.
அப்படி அழகும், கிளாமரும் இல்லை என்றால், அந்த நடிகை மீடு சர்ச்சைக்கு உள்ளாக வேண்டியிருக்கும். இதுதான் சினிமாவில் நிலையாக இருக்கும் நிலையில், பிகினி இல்லாமலும், கிளாமர் இல்லாமலும் நிர்வாண காட்சி இல்லாமலும் ஒரு நடிகையால் சாதிக்க முடியும் என்றால் அது கீர்த்தி சுரேஷ் ஆல் மட்டுமே முடியும்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்ரியாகவே வாழ்ந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
அந்தளவிற்கு கீர்த்தி சுரேஷின் நடிப்பு இருந்துள்ளது. இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்புறம் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் ஹிட் கொடுத்தது.
அதன் பிறகு பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மகாநடி (நடிகையர் திலகம்), சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்களில் வரிசையாக நடித்து தன்னை முன்னணி நடிகையாக காட்டிக் கொண்டுள்ளார்.
நயன்தாராவைப் போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில், மிஸ் இந்தியா என்ற தெலுங்கு படமும் பென்குயின் என்ற தமிழ் படமும் அடங்கும்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்திலும், மரக்கார், குட் லக் சகி, ராங் தே என்று பல படங்களில் நடித்து வருகிறார்.
தமிழைத் தவிர, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று திடீரென்று, #WeLoveKeerthySuresh என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இதன் மூலம் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் பல்வேறு வகையான முக பாவணைகளை கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பென்குயின் படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.