பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் யூசப் யுஹானா தற்போது முஹமது யூசப் ஒரு மிகச் சிறந்த வீரர் , டெஸ்ட் போட்டிகளில் அவரது விக்கட்டை எடுப்பதற்குள் பந்துவீச்சாளர்களுக்கு நா வறண்டு விடும் . அந்த அளவிற்கு நிலைத்தும் விளையாடுவார், தேவைக்கேற்ப அதிரடியாகவும் விளையாடி வெறுப்பேற்றுவார்.
குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளில் அதிக முனைப்புடன் விளையாடி நம் நாடிகளை எகிற வைப்பார் .
சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது “ராகுல் டிராவிட் ஒரு சிறந்த வீரர், அவர் போல மினக்கட்டு விளையாடுவது மிகவும் சிரமம். அவர் விளையாடும் போது நாங்கள் சீண்டுவதை பெரிதாய் கண்டுகொள்ள மாட்டார் அவரின் காரியத்தில் கவனம் பிசகாமல் இருப்பார் .
இன்று ஒரு வீரர் அவரின் ரன்களைக் கடந்துவிட்டாலோ , அல்ல ஒரு இரு போட்டிகளில் சற்று நிலைத்து ஆடிவிட்டாலோ அவரை “அடுத்த டிராவிட்” அல்லது திராவிடின் மாற்று இவரே என்று கூறி விடுகின்றனர். அது மிகவும் தவறு. என்னைப்பொறுத்தவரை ராகுல் திராவிட் ஒரு தனித்துவம் வாய்ந்த வீரர் ,அவருக்கு மாற்று என்பது கடினம்”.
ஆம் சரிதானே, எல்லோரும் திராவிட் ஆகி விட முடியுமா என்ன ?
சா.ரா.