zimvsban: மார்ச் 7, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோற்று வங்கதேச அணியிடம் தொடரை இழந்தது.
zimvsban
மூன்றாவது ஒருநாள் போட்டி சில்கட் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஏற்கனவே இரு போட்டிகளிலும் வங்கதேச அணியை கணிசமாக ரன் சேர்க்க விட்டது தன்னுடைய பந்துவீச்சு பலத்தை நிரூபித்த ஜிம்பாப்வே அணி, மீண்டும் பந்து வீச்சை தேர்வு செய்தது தான் சோகம்.
எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வில்லன் சொல்வது போல் நமக்கு கிடைத்த அடிமை இவன்தான் என்று வங்கதேசதிடம் ஜிம்பாப்வே சிக்கியது.
மூன்று ஒருநாள் போட்டிகளிலும் 322 எங்களை தாண்டவில்லை, நேற்றைய போட்டியில் 322 ரன்களை எடுத்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தொடக்க ஆட்டக்காரர் லிதன் தாஸ் மற்றும் தமிம் இக்பால் இருவரும் சேர்ந்து 40.5 ஓவர்களில் 292 ரன்கள் குவித்தனர்.
ஜிம்பாப்வே அணி வங்கதேச அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்த 40 ஓவர்கள் எடுத்துக் கொண்டது தான் சோகம்.
வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர்.
லிட்டன் தாஸ் 143 பந்துகளில் 176 ரன்கள் எடுத்து தன்னுடைய சொந்த அதிகபட்ச ரன்னை உருவாக்கிக்கொண்டார். தமிம் இக்பால் 150 பந்துகளில் 128 ரன்கள் எடுத்தார்.
ஆட்டம் மழை காரணமாக 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 43 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்தது வங்கதேச அணி.
43 ஓவர்களில் 342 ரன்கள் கடின இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே விக்கெட்டுகள் சரிந்தது.
ஜிம்பாவே அணியை 37.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 218 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 123 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி டிஎல் முறைப்படி வென்றது.
ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக சிகந்தர் ராசா 50 பந்துகளில் 60 ரன்களும், மதவேற 42 பந்துகளில் 42 ரன்களும், சபாவா 45 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேச தரப்பில் முகமது சைபுதீன் 4 விக்கெட்டுகளும், இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
வங்கதேச அணிக்கு தோக்க மாட்டிய ஜிம்பாப்வே அணியை 3-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வைத்து செய்தது.
முதல் போட்டியில் தமிம் இக்பால் சதம் எடுக்க, இரண்டாவது போட்டியில் லித்தன் தாஸ் சதம் எடுக்க, மூன்றாவது போட்டியில் இருவரும் சேர்ந்து சதம் எடுத்தது தான் குறிப்பிடத்தக்கது.
மூன்று போட்டிகளில் இருவரும் தலா 2 சதங்கள் விளாசினார். ஆட்டநாயகன் விருதை லிட்டன் தாஸ் வென்றார் தொடர் நாயகன் விருதை தமிம் இக்பால் வென்றார்.
வங்கதேச அணியின் கேப்டன் மோர்தசா மார்ச் 5ம் தேதி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் வங்கதேச கேப்டன்களில் 83 போட்டிகளில் 50 வெற்றிகள் பெற்று வங்கதேச கேப்டன் களில் அதிக வெற்றிகளை குவித்தவர் ஆவார்.
கேப்டன் மோர்தசாவிற்கு இது கேப்டனாக ஐம்பதாவது வெற்றி.