கொரோனா வைரஸ் ஐ எப்படி கண்டுபிடிப்பது எப்படி சரிபார்ப்பது அதன் அறிகுறிகள் என்னென்னஎன்பதை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
தற்போது புதிய நோயான கொரோனா வைரஸ் பற்றி தொடர்ச்சியான அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன (SARS-CoV-2) இதற்கு முன் இது 2019-nCoV என்று அழைக்கப்பட்டது .
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவுகிறது என்பது உண்மையாக இருந்தாலும், அதன் பிடியை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் நீங்கள் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக உணர்ந்தால் நீங்கள் உங்கள் அறிகுறிகளை தொடர்ச்சியாக கவனிப்பது அவசியம்.
உங்களுக்கு coronavirus இருப்பது பற்றி நீங்கள் கவலைப் படுகிறீர்களா? அப்படி இருந்தால் வீட்டிலேயே இருங்கள் உங்களுக்கு சிகிச்சை தேவையா என்பதை அறிய உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.
அறிகுறிகளை கண்காணித்தல்
- இருமல் போன்ற சுவாச அறிகுறிகளை கவனியுங்கள் :-
- corona வைரஸ் சுவாச நோய்த்தொற்று என்பதால் சளி இருமலுடனும் வெறும் இருமலுடன் அல்லது இல்லாமலும் இருப்பது பொதுவான அறிகுறிகள் ஆகும் .
- இருப்பினும் இருமல் மற்றும் ஒருவித ஒவ்வாமை அல்லது வேறு சில சுவாச நோய்த்தொற்று அறிகுறியாக இருக்கலாம் எனவே கவலைப்பட வேண்டாம் .
- உங்களுக்கு ஒருவேளை கொரோனா இருப்பதாக உணர்ந்தால் உங்கள் மருத்துவரை அழைக்கவும். ஒருவேளை நீங்கள் நோய்வாய்ப்பட்ட ஒருவரை சுற்றி இருந்திருந்தால் நீங்கள் சிந்தித்துப் பார்க்கவும்.
- இதுபோன்ற அவர் நோய்வாய்ப் பட்டிருந்தால் உங்களுக்கு தொற்று ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நபர்கள் உண்மையில் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்களிடமிருந்து தூரத்தை கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள் .
- உங்களுக்கு இருமல் இருந்தால், புதிய பிறந்த குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றவற்றை நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும். இவர்களிடமிருந்து நீங்கள் விலகி இருங்கள்.
இவர்களிடம் மட்டும் இல்லை நோய் எதிர்ப்பு சக்திக்காக மருந்து உட்கொள்பவர்கள் இடமிருந்தும் நீங்கள் சற்று விலகியே இருங்கள்.
2. உங்களுக்கு ஏதேனும் காய்ச்சல் இருக்கிறதா என்று பார்க்க உங்களுடைய வெப்பநிலையை சரிபார்க்கவும்:-
- காய்ச்சல் வைரஸின் பொதுவான அறிகுறியாக இருப்பதால் முதலில் உங்கள் வெப்பநிலை எப்போதும் சரிபார்க்கவும்.
- 100°4F க்கு வெப்பநிலை காய்ச்சல் என்பது கொரோனா வைரஸ் அல்லது வேறு ஏதேனும் தொற்று நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் உங்கள் அறிகுறிகளைப் பற்றி உங்கள் மருத்துவரை அழைத்து தெரிவிக்கவும்.
- உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் அது ஒரு தொற்று நோயாக இருக்கலாம் எனவே மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்.
3. உங்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் இருந்தால் அல்லது உங்களுக்கு மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள் ஏனென்றால் கரோனா வைரஸ் இருந்தால் அது சுவாசத்தை கடினமாக்கும்.
- உங்களுக்கு மூச்சு விடுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக ஹாஸ்பிடல் சென்று மருத்துவரைப் பாருங்கள் அதற்கு உண்டான சிகிச்சையை எடுங்கள்.
குறிப்பு:– 2019 ஆம் ஆண்டில் சீனாவில் தொடங்கிய COVID-19 பரவியதால் சில நோயாளிகளில் நிமோனியாவும் காணப்பட்டது, எனவே உங்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் இருந்தால் உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.
4. தொண்டையில் புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகிய இரண்டும் மற்றொரு நோய்களின் அறிகுறியாக இருக்கக்கூடும்:-
- coronavirus சுவாச நோய்த்தொற்று என்றாலும் அது மூக்கு ஒழுகல் ஏற்படுத்தாது. இருமல் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை மட்டும் மிகவும் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
- ஜலதோஷம் அல்லது காய்ச்சல் போன்ற பிற நோய்களும் மற்றும் ஒரு சுவாச நோய்த்தொற்று அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக உங்கள் மருத்துவரிடம் சென்று அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
எப்படி குணப்படுத்துவது:
- வீட்டிலேயே இருங்கள் நீங்கள் வீட்டிலேயே இருப்பதால் உங்களுடைய நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும். எனவே உங்களுக்கு உடல்நிலை சரியில்லாத இருக்கும்போது வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்.
- நீங்கள் மருத்துவரை பார்க்க போகின்றீர்கள் என்றால் கட்டாயமாக வைரஸ் பரவாமல் தடுக்க ஃபேஸ் மாஸ்க் அணியுங்கள்.
- உங்களுடைய டாக்டரிடம் நீங்கள் பழைய நிலைமைக்கு எவ்வளவு நாள் கழித்து திரும்புவோம் என்று கேளுங்கள். என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்னென்ன வேலை செய்யக்கூடாது என்பதை கேட்டு அறியுங்கள்.
2. முடிந்த அளவு நீங்கள் ஓய்வு எடுங்கள் அப்படி ஓய்வு எடுக்கும் பொழுது உங்களுடைய உடலை பழைய நிலைமைக்கு மீட்க முடியும். அப்போது உங்கள் உடலானது நோய் தொற்றை எதிர்த்து போராடும். அதனால் நீங்கள் எவ்வளவு ஓய்வு எடுக்கிறீர்கள் அவ்வளவு உங்களுக்கு நல்லது.
- உங்களுடன் எப்போதும் உங்கள் போர்வையை வைத்திருங்கள் இதனால் குளிர்ச்சியாக இருக்கும் போது அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- நீங்கள் படுக்கும் பொழுது உங்கள் தலையணையை சற்று மேலே உயர்த்தி உயரமாக வைத்து படுத்துக் கொள்ளவும். இப்படி எங்கள் படுத்துக் கொள்வதால் உங்களுக்கு இருமல் அதிகமாக வருவதைத் தடுக்க முடியும்.
3. கொரோனா வைரஸ் உங்களுக்கு வருகிறது என்றால் உங்களுக்கு கண்டிப்பாக காய்ச்சல் மற்றும் உடல் வலி இருக்கும். அப்போது நீங்கள் (advil, motrin) (Aleve) or (Tylenol) போன்ற மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இது எடுத்துக்கொள்வதால் காய்ச்சல் கொஞ்சம் கட்டுக்குள் கொண்டுவரும்.
- எக்காரணம் கொண்டும் குழந்தைகள் அல்லது 18 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அஸ்பிரின்(aspirin) கொடுக்க வேண்டாம் ஏனெனில் இது ( Reye’s syndrome) நோய்க்குறி எனப்படும் அபாயகரமான நிலையை ஏற்படுத்தும்.
- நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருங்கள், ஏனெனில் நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ள காற்று சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உங்களுக்கு சுவாசிப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.
- நிறையத் தண்ணீர் ஆகாரங்களை சாப்பிடுங்கள். இளநீர், பழ ஜூஸ், தண்ணி பழம் இந்த வகையான பழங்களை நீங்கள் சாப்பிடலாம். எவ்வளவு பழங்களை நீங்கள் சாப்பிடுகிறீர்கள் அவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி உங்களுக்கு உண்டாகும்.
- தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பின்பு குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால் தண்ணீரில் இருக்கும் கிருமிகள் இறந்து விடும்.
-
மேலும் காய்கறி, சூப் மூலிகை சூப் போன்ற சூப்பு வகைகளை நீங்கள் குடிக்கலாம். இதனால் உங்கள் தொண்டைக்கு உதவிகரமாக இருக்கும்.
-
எலுமிச்சை மற்றும் ஒரு ஸ்பூன் தேனை சூடான நீரில் அல்லது தேனில் கலந்து குடிக்கலாம்.
-
கிரீன் டீ குடிக்கலாம்.
-
நீங்கள் உட்கொள்ளும் உணவில் அடிக்கடி மிளகு ரசம், வெங்காயம், காய்கறிகள்அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
-
பழைய சாதம், வெங்காயம், கூழ், களி ஆகியவற்றை நீங்கள் சாப்பிடலாம் இதனால் உங்களுக்கு உடல் பலம் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாகும்.
மேலும் தெரிந்து கொள்ள இதை படியுங்கள்