சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 100 நாடுகளுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களை காவு வாங்கி வருகிறது. இத்தாலியில் கொத்து கொத்தாக மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது அதிலும் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது.
பல்வேறு நாடுகள் என்ன செய்வது என்று தவித்து வரும் இவ்வேளையில் வைரசை விட வதந்தியும் அதிவேகமாக பரவி வருகிறது.
ஒவ்வொரு நாளும் வாட்ஸ்அப் பகிர்வு, யூடியூப் முட்டாள்தனமான வீடியோக்கள், ஃபேஸ்புக் பகிர்வு, டிவிட்டர் பகிர்வு போன்ற தவறான பகிர்வுகள் கொரோனாவை நோயைப்பற்றி பகிர்ந்து வருகிறார்கள்.
சிலர் நாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
நேற்று தவறான வதந்தியை பரப்பிய ஹீலர்பாஸ்கர் கைது செய்யப்பட்டிருக்கும் வேலையில் இன்று சூரியனிலிருந்து வெளிவரும் 4 ரேஸ் அதிர்வலை மூலம் பரவுகிறது என்றும், சூரியனால் அதிக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றும் புரளியை பரப்பி வருகிறார்கள்.
சிலர் வீட்டில் அமர்ந்து ஏதாவது சொல்லவேண்டும் என்று தன் சுய கருத்துக்களையும் தன் சொந்த கற்பனைகளை வளர்த்து பொதுவாக எழுதி வதந்திகளை பரப்புகிறார்கள்.
ஆக மக்கள் அனைவரும் வதந்திகளை நம்பாமல் உண்மையை ஆராய்ந்து அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் நோக்கத்தில் பகிர வேண்டும்.
தவறான கருத்துக்களை பகிர்வதன் மூலம் பல பாதிப்புகளை மக்கள் மட்டுமில்லை இந்த நாடும் சந்திக்கும்.
கொரோனா வைரஸ் மட்டுமில்லாமல் வதந்திகளும் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும்.