Home திரைவிமர்சனம் மூக்குத்தி அம்மன் விமர்சனம்; Mookuthi Amman Review

மூக்குத்தி அம்மன் விமர்சனம்; Mookuthi Amman Review

814
0
மூக்குத்தி அம்மன் விமர்சனம்; Mookuthi Amman Review

Mookuthi Amman Review download: மூக்குத்தி அம்மன் ஹாட்ஸ்டார் விமர்சனம். தீபாவளி அன்று ஆர்ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ளது.

அம்மன் தாயி

இது வழக்கமான சாமி படமும் இல்லை, நவீன கால சாமி படமும் இல்லை. முழுக்க முழுக்க காமெடி படமும் இல்லை. அனைத்தையும் மிக்ஸ் பண்ணிய கூட்டாஞ்சோறு.

ஆர்ஜே.பாலாஜி, நயன்தாரா கிண்டிய இந்த கூட்டாஞ்சோறு  எப்படி இருக்குது என்றால் சொல்வதற்கு ஒன்று இல்லை.

எல்.கே.ஜி. படத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்தப்படத்தை பார்த்தால் அந்த அளவிற்கு விறுவிறுப்பு, சுவாரஸ்யம் சற்று குறைவு தான்.

படத்தில் உள்ள காமெடி கட்சிகளால் மட்டுமே ஓரளவு நம்மால் படத்தை பார்க்க முடிகிறது. பாபுஜி சாமியார் கதாப்பாத்திரம் PK படத்தில் வரும் “பம்பம் போலே” கதாப்பாத்திரம் சாயலில் உள்ளது.

மேலும் சத்குரு, கோவை மலைப்பகுதியை ஆக்கிரமித்து கொண்டதை எமோசனலுக்கு உள்ளே சேர்த்து, உல்டா பண்ணி சாமியார் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மூக்குத்தி அம்மன் சொல்வது என்ன? (Mookuthi Amman Review)

இந்த படத்தின் மிகப்பெரும் தோல்வியே கதை எதை நோக்கி செல்கிறது என்பதை அழுத்தமாகக் கூறாமல் விட்டது தான்.

கடவுள் மனிதனுக்கு வரம் கொடுத்து அவன் வாழ்வில் அற்புதம் நிகழ்த்தும் கதையா? தீய சக்தியை அழிக்கும் கதையா? போலிச்சாமியாரின் முகத்தை தோலுரிக்கும் கதையா? தந்தையை தொலைத்த குடும்பம் ஒன்று சேரும் கதையா?

இதில் ஒரு விசயத்தை நோக்கி கதை நகராமல் அதில் கொஞ்சம், இதில் கொஞ்சம் என கதை மாறிமாறி செல்கிறது. ஆனால் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இல்லை.

நயன்தாரா நடிப்பு

நயன்தாராவிற்கு நீண்ட நாட்களாகவே ஒரு ஏக்கம் உண்டு. நாம் இதுவரை சரித்திர படத்திலோ, சாமி வேடத்திலோ நடித்து இல்லை என்று.

அனுஷ்கா இந்த இரண்டிலும் கை தேர்ந்தவர். நயனுக்கு இந்த கதாப்பாத்திரங்களில் நடித்த அனுபவம் இல்லாமல்போனதால் தான் பாகுபலி படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அப்போது கூறப்பட்டது.

அதன்பிறகே நயன்தாரா காஷ்மோரா படத்தில் நடித்தார். ஆனால் அந்தப்படம் தோல்வியடைந்தது. சைரா படத்தில் நயன்தாராவிற்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை.

தற்பொழுது மூக்குத்தி அம்மன் கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். உண்மையில் நயன்தாரா, அம்மன் வேடம் பொருத்தமாகவே இல்லை.

இந்தப்படம் ஓடிடி தளத்தில் வெளியானதால் ஒருமுறை பார்க்கலாம். மீண்டும் மீண்டும் பார்க்கும் அளவிற்கு காமெடியும் சிறப்பாக இல்லை.

REVIEW OVERVIEW
Movie Rating
Previous articleசூரரை போற்று விமர்சனம் | Soorarai Pottru OTT Review
Next articleNivar Puyal | நிவர் புயல் சென்னையை கொடூரமாகத் தாக்க வாய்ப்பு அதிகம்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here