Movie Review Thuppakki Munai | துப்பாக்கி முனை திரை விமர்சனம்
துப்பாக்கி முனை, விக்ரம் பிரபு நடிப்பில் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்தியாவின் கடைக்கோடி முனையான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல் முனையில் எடுக்கப்பட்டுள்ளது.
விக்ரம் பிரபுவா?
விக்ரம்பிரபு ஆரம்ப காலகட்டத்தில், நடிப்பே வரவில்லையென்றாலும் கதைத்தேர்வு நன்றாக இருக்கும். ஆனால் வீர சிவாஜி, சத்ரியன், நெருப்புடா, பக்கா இந்த படத்துக்கு அப்புறம் வேற லெவல்.
விக்ரம் பிரபுவின் படம் என்றாலே, ஒருவித பயத்துடன் தியேட்டருக்கு போக வேண்டிய நிலை. ரிவியூ போடணும், நம்மள நம்புற நாலு ஜீவனுங்க, எக்குத்தப்பா படத்துக்குப்போயி மாட்டிக்க கூடாதுல. (இத படிக்கிற நீங்க தான் அந்த நாலு ஜீவன்)
படம் ஆரம்பிச்சு டைட்டில் போட்டதும், மியூசிக் டேரடக்கரு போட்ட மியூசிக்க கேட்டதும், அள்ளுவுட்ருச்சு. (இவர நிறைய புகழ வேண்டி இருக்கு, கடைசியா பாத்துக்கலாம்).
ஒருவித கனத்த இதயத்தோட படம் பார்க்க ஆரம்பித்தேன். காக்க காக்க சூர்யா ரேஞ்சுக்கு ஒரு பிளாஷ்பேக்குடன் விக்ரம் பிரபு என்ட்ரி. ரைட்டு, சைத்தான் சிவாஜி பேரன் ரூபத்துல வந்துட்டான்னு மனச தேத்திக்கிட்டேன்.
இயக்குனரின் ஆளுமை
படம் ஆரம்பிச்சு 15-வது நிமிஷத்துல, இது விக்ரம்பிரபு படம் இல்லடா… என்னோட படம். அப்டின்னு படம் முழுவதிலும் ஆளுமை செலுத்தியுள்ளார் புதுமுக இயக்குனர் தினேஷ் செல்வராஜ்.
போலீஸ் படம் எடுப்பது முக்கியமில்லை, ரசிக்கும் படியாக எடுக்கணும். அந்த வகையில் இயக்குனர் வெற்றி பெற்றுள்ளார்.
பட்ஜெட் சிக்கனம்
நிறைய காட்சிகளில் பட்ஜெட் சிக்கனத்தை பார்க்க முடிந்தது. கொடுத்த பட்ஜெட்டில் நாலு ரோடு… ரெண்டு பங்களா… ஒரு பீச் என சிக்கனமாக படத்தை இயக்கியுள்ளார் தினேஷ் செல்வராஜ்.
என்னய்யா தாடி இது?
ஆரம்பத்தில், விக்ரம் பிரபுவின் தாடியை பார்த்ததும் சிரிப்பாக இருந்தது. பிளாஷ் பேக் முடிந்தபின், இளநரைத் தோற்றம் சிறப்பு. மாறுபட்ட முக அமைப்பு. ரசிக்கும்படியான ஸ்டைலாக மாறிப்போனது.
சிவாஜி வம்சத்துல வந்துட்டு இன்னும் நடிப்புல முழுசா தேறலைனாலும், முந்தைய படங்களைக் காட்டிலும் நல்ல இம்ப்ரூவ்மென்ட். இதே மாதிரி ஒழுங்கான கதைத்தேர்வு இருந்தா கொஞ்ச நாளைக்கு வண்டி ஓட்டலாம்.
என்னதான் நல்ல இயக்குனரா இருந்தாலும், அத கெடுக்குறதுக்குனே நாலு பேரு இருப்பாங்க. நாலு பைட்டு, நாலு சாங்கு, கொஞ்சமா ரொமான்சு. இதெல்லாம் வச்சே ஆகணும் குதிப்பாங்க. இதுலவும் அப்படித்தான் நடந்திருக்கு.
கருவேப்பிலை ஹன்சிகா
இந்த படத்துல ஹன்சிகாவ தூக்கிட்டு, அவங்க சம்பள பணத்துல இன்னும் வலுவான திரைக்கதையை அமைச்சிருந்தா, துப்பாக்கி படத்துக்கு இணையாவே பேசப்பட்டு இருக்கும்.
ஹன்சிகா ரோலும் வேஸ்ட், கால் சீட்டும் வேஸ்ட். ஹன்சிகாவ கொஞ்சம் அழகாவே காட்டிருந்தாரு, சினிமோட்டோகிராப்பர் ரசமதி. பட், படத்துல சொல்லுற அளவு ரோல் இல்லியே. கொத்தமல்லி, கருவேப்பிலை ஹன்சிகாவா மாறிட்டாங்க.
வீண் செலவு
மற்ற நடிகர்களிடமும் நடிப்பில் எதார்த்தம் குறைந்து இருந்தது. ஷூட்டிங் சீக்கிரம் முடிக்க வேண்டும் என பல காட்சிகள் அவசரமாக எடுக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிந்தது.
ரேப் காட்சிகளில் ஓவர் எக்ஸ்பிரசன். கற்பழித்தவர்கள் கைகள் ஒழுங்காக கட்டப்படவில்லை. கிளைமேக்ஸில் அவ்வளவு பெரிய சண்டைக்காட்சி தேவையே இல்லை. இப்படி இன்னும் சில உள்ளன…
க்ளைமேக்ஸ்
விக்ரம் பிரபுவுக்கு கையில விரல்கள் இல்ல. அது என்ன காரணம்கிறதே தெரியல. கிளைமேக்ஸ் மெசேஜ் சிறப்பு. ரெண்டு.. மூணு… என கிளைமேக்ஸ் நீண்டு கொண்டே இருக்கு.
ஆடியன்ஸ்கு எது புடிக்குதோ… அத கிளைமேக்சா பிக்ஸ் பண்ணிக்க சொல்லிட்டாரு போல டைரக்டர்.
எனக்குப் பிடிச்ச கிளைமேக்ஸ் புல்லட்டை கையில கொடுத்து, துவண்டுபோகும் நேரத்தில இத பார்ன்னு சொல்றது. என்னையே பூஸ்ட் பண்ணுன மாதிரி உணர்ந்தேன்.
இசையமைப்பாளரை புகழும் நேரம்
காப்பியடிக்கும் இசையமைப்பாளர்களுக்கு மத்தியில், எல்.வி.முத்துகணேஷ் ஒருபடி மேல். காப்பியடிக்கும் இசையமைப்பாளரின் இசையவே காப்பி அடிக்கிறதுல கில்லாடி.
இம்மார்டல் இசை ஆல்பத்தை காப்பியடிச்சி அனிருத், கத்தி படத்துல தீம் மியூசிக்கா வச்சிருப்பாரு. முத்து கணேஷ், அத படம் புல்லா போட்டு வச்சிருக்காரு.
முத்துகணேஷ், காப்பி அடிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டிங்க, கொஞ்சம் இன்டர்நேசனல் ஆல்பத்துல இருந்து உருவுங்க. அப்போ தான், குட்டி இசைப் புயல் அனிரூத்துக்கு டப்பு கொடுக்க முடியும்.
படத்தின் தூண்
எடிட்டர் புவன் சீனிவாசன் மற்றும் கேமராமேன் ரசமதி இருவரும் படத்தின் முக்கியத் தூண். இயக்குனரின் தவறுகளை பல இடங்களில் மறைத்து காட்சிகளை ரசிக்க வைத்துள்ளனர். குறிப்பாக, வேல ராமமூர்த்தி ஸ்லோமோசனில் திரும்பும் காட்சி.
மொத்தத்தில் துப்பாக்கி முனை, தவறுகளின் தடுப்பு முனை.
nice