Home Latest News Tamil பிராவோவின் அடுத்த பாடலில் கோலி-தோனி

பிராவோவின் அடுத்த பாடலில் கோலி-தோனி

379
0
பிராவோவின்

பிராவோவின் அடுத்த பாடலில் கோலி-தோனி.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் திவைன் பிராவோ இந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்டவர்.

கிரிக்கெட் மட்டுமில்லை, பாடகர், டான்சர் மற்றும் நடிகர் என பல அவதாரம் எடுத்துள்ளார்.

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பிறகே, பிரவோவிற்கான மவுசு அதிகமானது. சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது.

ஒவ்வொரு முறையும் விக்கெட் எடுக்கும்போது, கேட்ச் பிடிக்கும்போது பிராவோ ஸ்டைலாக நடனம் ஆடுவார்.

ஏற்கனவே பிராவோ பாடிய சாம்பியன் பாடல் பயங்கர ஹிட் ஆகியது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

தற்பொழுது அவர் ரிலீஸ் செய்த ‘ஆசியா’ பாடல் இந்தியாவின் தோனி-கோலி, ஸ்ரீ லங்காவின் சங்ககரா, பாகிஸ்தானின் அஃப்ரீடி, பங்களாதேஷின் சாகிப் அல் ஹாசன் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் ராசித் கான் போன்ற ஆசியக் கிரிக்கெட் வீரர்களை மையமாக வைத்து எழுதி பாடியுள்ளார் பாடலாகும்.

அஃப்ரீடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆசியா பாட்டை பாராட்டி ட்வீட் செய்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here