குழந்தை பிறந்தவுடன் கடத்தப்படலாம்? கைக்குழந்தைகளை கடத்தி மில்லியன் ரூபாய்களுக்கு விற்கப்படுவதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் எங்காவது ஒரு மூலையில் தினம் தினம் பிறந்தவுடன் குழந்தை காணமல்போவதாக வழக்குகள் பதிவாகின்றன. ஒரு நாளைக்கு இந்தியா முழுவதும் 15 முதல் 25 குழந்தைகள் காணமல்போவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகள் எதற்காக கடத்தப்படுகின்றனர்? ஏன் கடத்தப்படுகின்றனர்? இவர்கள் பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவை குறித்து பல அதிர்ச்சி தகவலை சமூக ஆர்வலர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
பாலியல் தொழில்
குழந்தைகளை கடத்தி, சிறுவயது முதலே பாலியல் தொழிலில் ஈடுபட பழக்குகின்றனர். மும்பை போன்ற ரெட்லைட் நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றனர்.
பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகளை மட்டுமே கடத்துகின்றனர். பாலியல் புரோக்கர்களிடம் சிக்கும் குழந்தைகள், ஒரு வழிப்பாதையில் செல்வதற்கு சமம். சென்றால் சாகும்வரை திரும்பிவர முடியாது.
பாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் குழந்தைகள் பல லட்சங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறனர்.
பிச்சை எடுக்கும் குழந்தைகள்
ரோட்டோரம், தெருவோரம், சிக்னல் என மாநகரங்களில் நிறைய குழந்தைகள் பிச்சையெடுப்பார்கள். இவர்கள் பின்னணியை விசாரித்தால் பெற்றோர் என பிச்சைகாரர்கள் சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.
ஆனால், இவர்களின் உண்மையான பெற்றோர்கள் யார் என்று அவர்களுக்கே தெரியாது. டி.என்.ஏ. பரிசோதனை நிகழ்த்தினால் 75 சதவீதம் நெகடிவ் ரிசல்ட் கிடைக்கும்.
இதுபோன்ற குழந்தைகள், பிறந்தவுடன் கடத்தப்பட்டிருக்கும். நாங்கள் தான் பெற்றோர்கள் என கடத்தல் கும்பல், குழந்தைகளை பிச்சை எடுக்கவைத்து; அதில் கிடைக்கும் பணத்தில் சொகுசாக வாழ்வார்கள்.
பரிசோதனை விலங்குகள்
புதிதாக கண்டுபிடித்த மருந்துகள் முதலில் விலங்குகளுக்கு கொடுத்துப் பரிசோதிக்கப்படும். பிறகு மனிதனுக்கு கொடுத்துப் பரிசோதிக்கப்படும். இதற்காக பல கோடிகளை மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் செலவு செய்யும்.
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளை பரிசோதிக்க எந்த பெற்றோராவது குழந்தைகளை விற்பார்களா? இதுபோன்ற மருந்துகளை சட்டத்திற்கு புறம்பாக பரிசோதனை செய்வதாக தகவல் கசிந்துள்ளன.
கடத்தல் குழந்தைகளை கொண்டு பரிசோதிப்பதால் செலவும் குறைவு, இறந்தாலும் யாருக்கும் தெரியப்போவதில்லை. இதற்காக பல மில்லியன் ரூபாய்க்கு குழந்தைகள் விற்கப்படுகின்றார்கள்.
தீவிரவாதம் மற்றும் நரபலி
குழந்தைகளை நரபலி கொடுப்பதற்காக சில மூடர்கள், அவ்வப்போது கடத்துவதை நாம் நிறையவே கேள்விப்பட்டிருப்போம். அதேபோல் கடத்தப்பட்டு சிறுவயது முதலே மூளைச்சலவை செய்து தீவிரவாதியாகவும் மாற்றப்படுகின்றனர்.
குழந்தைகள் எப்படி கடத்தப்படுகின்றனர்?
கண்காணிப்பு குறைவாக உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில், இந்த கடத்தல் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. குழந்தை பிறந்த சிலமணி நேரங்களிலேயே கடத்தப்படுகின்றன. இதனால், பெற்றோரே சில நாட்களில் குழந்தையின் முகத்தை மறந்து விடுகின்றனர். குழந்தைகளின் முகத்தோற்றமும் சில நாட்களில் மாறிவிடும். இது கடத்தல்காரர்களுக்கு வசதியாக இருக்கும்.
மேலும், வீட்டின் வெளியே விளையாடும் குழந்தைகள், பள்ளி செல்லும் குழந்தைகள், தனிமையில் இருக்கும் குழந்தைகள் என கடத்தல் கும்பல் கண்ணில் பட்டவுடன், கடத்தலுக்கு வசதியான இடமானால் யோசிக்காமல் கடத்தலில் ஈடுபடுவார்கள்.
இப்படி கடத்தப்படும் குழந்தைகள், மொட்டையடிக்கப்பட்டு அடையாளம் தெரியாத அளவு மாற்றப்பட்டு விற்கப்படுவார்கள். சர்வேதச மாப்பியாவிடம் செல்லும் குழந்தைகள் பல இடைத்தரகர்கள் மூலம் கைமாற்றப்படுகின்றது. இதுபோன்ற சம்பவங்கள் கப்பல்கள் மூலமே நிகழ்த்தப்படுகின்றது.
கர்ப்பிணிகளே உஷார்!
நீங்கள் கர்ப்பிணியாக இருந்தால், குழந்தை பிறந்தவுடன் சில நிமிடங்கள் கூட தனியாக மருத்துவமனைகளில் இருக்கவேண்டாம். தனியாக இருக்கும்நிலை வந்தால் கண் அசராமல் விழிப்புடன் இருக்கவும்.
குழந்தையை முந்தானையுடன் முடிந்துகொண்டு உறங்கிய, ஒரு தாயின் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உங்களை சுற்றி மருத்துவமனை உழியர்போன்றே போலியான ஆட்கள் நடமாடலாம். உடல்நலம் சரியில்லை என கடத்தல் கும்பல் உங்கள் அருகிலேயே இருக்கவும் வாய்ப்புண்டு.
குழந்தையை உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் தவிர வேறு யார் பொறுப்பிலும் விடவேண்டாம். எந்த நிமிடம் வேண்டுமானாலும், பத்து மாதம் பேணிப்பாதுகாத்து பெற்றெடுத்த குழந்தை காணமல்போக வாய்ப்பு உள்ளது.
நீங்கள் கர்ப்பிணியாக இருக்கும்போது எவ்வளவு கவனமாக இருந்தீர்களோ, அதைவிட நூறு மடங்கு கவனத்துடன் குழந்தை பிறந்தவுடன் இருப்பது அவசியம்.