மே, ஜுன் மாததிற்கு பிறகு கொரோனா வைரஸ் தமிழகத்தில் படிபடியாக குறையும் என்று உலககோப்பை பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி பல லட்சம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி பல்லாயிரம் மக்களை கொன்று வருகிறது.
இதனால் உலகமே பல முன் எச்சரிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற ஆடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது
அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இழப்புகளும், ஸ்பெயினில் 5000 மேற்பட்ட இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளபடி 21 நாள் சுய ஊரடங்கு உத்தரவை மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.
இந்த கொரோனா வைரஸ்க்கு இன்னும் தடுப்பு மருந்து, குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. பல நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போது உலக கோப்பையை சரியாக கணித்த பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கொரோனா பற்றி ஜோதிடம் கணித்துள்ளார்.
அதில் கூறியதாவது
“அவர் மார்ச் 29ம் தேதிக்கு பிறகு படிப்படியாக குறையும். சீனா இதற்கு மருந்து கண்டுபிடிக்கும்.
ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு படிப்படியாக குணமடைவார்கள். உலகத்தில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் இதிலிருந்து குணமடைவார்கள்.
மே மாத இறுதியில், ஜூன் மாதங்களில் எந்தவித அறிகுறிகளும் இருக்காது. எல்லோரும் சரியாகி விடுவார்கள்.
ஜூன் மாதங்களில் இதன் தாக்கம் சிறிதும் இருக்காது. இந்த வைரஸ் எங்கே துவங்கப்பட்டது அங்கேயே மருந்து கண்டுபிடிப்பார்கள். அதாவது சீனாவே கண்டுபிடிக்கும்.
ஜூலை மாதம் கண்டிப்பாக ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும். தமிழ்நாட்டில் இதனால் பெரிதாக பாதிப்பு இருக்காது. உயிரிழப்புகளும் இருக்காது. மேலும் 50 பேர்களுக்கு மட்டுமே இந்த தொற்று பரவக்கூடும்.
இதனால் மக்கள் யாரும் பதட்டப்பட வேண்டாம். வெளியில் சென்றால் கைகளை நன்கு கழுவ வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.