Home நிகழ்வுகள் உலகம் எந்த நாடுகளில் கொரோனா பரவவில்லை

எந்த நாடுகளில் கொரோனா பரவவில்லை

646
1

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சீனாவில் உருவானதாக சொல்லப்படும் இந்த கொரோனா வைரஸ் ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இறப்பு எண்ணிக்கையில் உலுக்கி வருகிறது.

இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டு அரசாங்கங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

உலகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் இந்த வைரஸால்.

வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளையும் இந்த வைரஸ் விட்டுவைக்கவில்லை. 150 நாடுகளுக்கு மேல் இந்த வைரஸ் பரவி உள்ளது.

ஆஸ்திரேலியா பிரிட்டன் போன்ற நாடுகள் ஆறு மாத காலம் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு இல்லை இந்தியாவில் தற்போது 1600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கை 100 தாண்டியுள்ளது. இந்தியா நாடு முழுவதும் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை 144 சுய ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.

இந்த கொரோனா வைரஸ் பாதிக்காத நாடுகளும் உண்டு. மொத்தம் 12 நாடுகளை இந்த வைரஸ் தாக்கவில்லை.

ஆப்பிரிக்காவில் உள்ள ஏழு நாடுகளும், ஆசியாவில் உள்ள ஐந்து நாடுகளுக்கும் இந்த வைரஸ் பாதிக்கவில்லை.

தெற்கு சூடான், கமோரோஸ், மாலாவி, போட்ஸ்வானா, புருண்டி, சியாரா லியோ, சவுவ் டோமே அன்ட் பிரின்ஸ்பி ஆகிய ஆப்பிரிக்க நாடுகளும்,

ஆசிய கண்டத்தில் வடகொரியா, மியான்மர், தஜிகிஸ்தான், துர்கமேனிஸ்தான், ஏமன் போன்ற நாடுகள் கொரோனா தொற்றில் இருந்து தப்பியுள்ளனர்.

ஐரோப்பா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா போன்ற கண்டங்களில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேநிலைதான் ஜப்பான் நாட்டிலும் நாளுக்கு நாள் இந்த தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 70 பேருக்கு இந்த தொட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலோரம் இருக்கும் சில தீவுகளிலும் இந்தத் தொற்று பாதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleகமலின் வேட்டையாடு விளையாடு 2 உறுதி: கௌதம் மேனன்!
Next articleவில்லன் விஜய் சேதுபதியின் பொலக்கட்டும் பற பற பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here