பாஜக-அதிமுக கூட்டணி வாஷ்அவுட்; ரஜினியின் நதிநீர் அறிகுறி
2004 நாடாளுமன்ற தேர்தலின்போது நடிகர் ரஜினிகாந்த் இந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பது வாஜ்பாய் தலைமையிலான அரசால் மட்டுமே முடியும் எனக் கூறினார்.
அந்த தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக தமிழகத்தில் ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை.
காலங்கள் உருண்டோடிவிட்டது. வாஜ்பாய் மறைந்தார். ஜெயலலிதாவும் மறைந்தார். பாஜக தற்பொழுது ஆட்சியில் உள்ளது. இன்னும் நதிநீர் இணைக்கப்படவில்லை.
அன்று ஒருகோடி தருவதாகச் சொன்ன ரஜினி அதன்பிறகு இன்று மீண்டும் அதே நதிநீர் இணைப்பை பாஜகவால் தான் கொடுக்க முடியும் எனக்கூறி ஆதரவை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஐந்து வருடத்தில் மோடியிடம் ரஜினி ஒருமுறைகூட நேரில் சென்று நதிநீர் இணைப்பை பற்றி பேசவில்லை.
தமிழக விவசாயிகள் நதிநீரை இணைக்க வேண்டும் என டெல்லியில் போராடியபோதும் ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.
அதிமுக-பாஜக ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் ஒன்று நடக்கவில்லை. ரஜினி சொன்னதால் அடுத்து ஆட்சியைப் பிடித்து முதல் வேலையாக நதிநீரை இணைத்து விடுவார்கள் என நம்புவோம்.
அதுசரி… ரஜினி நதிநீர் ஆதரவு என அறிவித்தாலே அந்தக்கூட்டணி வாஷ்அவுட் ஆகிவிடுமே? பிறகு எப்படி நதிநீர் இணைக்கப்படும்.