Home நிகழ்வுகள் தமிழகம் ஆம்னி பேருந்து கட்டணம் – தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்கம் அதிரடி

ஆம்னி பேருந்து கட்டணம் – தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்கம் அதிரடி

270
0

ஆம்னி பேருந்து கட்டணம் – தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்கம் அதிரடி

வரும் 18  தேதி முதல் பேருந்து சேவை துவங்கும் பொழுது  ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை இருமடங்காக உயர்த்த ஆம்னி பேருந்து சங்கம் முடிவு செய்துள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது .

கொரோன தடுப்பு நடவடிக்கை:

கொரோன தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் அனைத்து விதமான சாலை போக்கு வரத்துகளும் முடக்கப்பட்டுள்ளது .

இதன் காரணமாக போக்குவரத்து கழகங்கள் மாதம் சுமார் 1200  கோடி வரை இழப்பினை சந்திப்பதாக தெரியவந்துள்ளது .

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 40  நாட்களாக எந்த பேருந்தும் இயக்கப்படவில்லை .

மூன்றாவது கட்ட ஊரடங்கு:

எனினும் வரும் திங்கள் கிழமை முதல் மூன்றாவது கட்ட ஊரடங்கு முடிவடைந்து நான்காவது கட்ட ஊரடங்கு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

ஒவ்வொரு கட்ட ஊரடங்கிலும் பல தளர்வுகள் கிடைப்பதால் இந்த முறை உரிய பாதுகாப்போடு பொது போக்குவரத்தினை துவங்க அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின .

ஆம்னி பேருந்துகளின் கட்டணம்:

இந்நிலையில்தான் திங்கட்கிழமை பேருந்து சேவை துவங்கும் பட்சத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்படும் என்று ஆம்னி பேருந்து சங்கம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது .

கட்டண உயர்வை பொறுத்த வரை தற்போது ஒரு கிலோ மீட்டருக்கு 1 . 60  ருபாய் என்ற அளவு தற்பொழுது 3 .20  என்ற அளவுக்கு உயர்கிறது

ஆம்னி பேருந்து சங்கம்:

இந்த கட்டண உயர்வு ஊரடங்கு முடிவடைந்தவுடன் அமலுக்கு வரும் என்று சங்கம் தெரிவித்துள்ளது .

ஏற்கனவே தமிழக அரசும் பேருந்து  கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.

Previous article21 அடி சனி பகவான்: பரிகாரம் தேவையில்லை! சென்று தரிசித்தாலே போதும்!
Next articleகொரோனா முழுவதுமாக எப்போதும் ஒழிக்கப்படாது, WHO

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here