ஆற்றில் குளித்த பெண்ணிடம் சிலுமிசம் செய்த போதை ஆசாமிகள்! டாஸ்மார்க் பரிதாபங்கள். நேற்று முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதன் விளைவு.
மது அருந்திவிட்டு ஆற்றின் வழியே சென்ற இளைஞர்கள், தன் 4 குழந்தைகளுடன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த கீதா எனும் பெண்மணியின் கையைப் பிடித்து இழுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை பெரிய பாலம் அருகே இருக்கும் மலையப்ப நகர் பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர் தான் கீதா.
ஆத்திரமடைந்த கீதா, அந்த இளைஞர்களை திட்டியதால், அவரையும் அவர் குழந்தைகளையும் ஆற்றில் எட்டி உதைத்து விட்டு அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
கடும் கோபத்தில் இருந்த கீதா, குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு நேராக மாதுபான கடைக்கு சென்று, உங்களால் தான் நிம்மதியே இல்லை என கத்தியுள்ளார்.
காவல் நிலையத்துக்கு சென்ற கீதா இளைஞர்கள் மதுபோதையில் தன்னை எட்டி உதைத்து விட்டதாக புகார் அளித்துள்ளார். இது போன்று இன்னும் என்னென்ன பிரச்சனைகள் வரப்போகிறது என தெரியவில்லை.