Home நிகழ்வுகள் தமிழகம் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர்  ஆலோசனை

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர்  ஆலோசனை

254
0

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர்  ஆலோசனை

தமிழகத்தில் வரும் 17 தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் ஊரடங்கை மேலும் நீடிப்பது குறித்து தமிழக முதல்வர்  பழனிச்சாமி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் .

மூன்றாவது கட்ட ஊரடங்கு:

தமிழகத்தில் நடைமுறையிலுருக்கும்  மூன்றாவது கட்ட ஊரடங்கு வரும் ஞாயிற்று கிழமையுடன் முடிவடைய உள்ளது.

இது குறித்து நேற்று முன்தினம் உரையாற்றிய பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கு குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்து கொள்ள உத்தரவு பிறப்பித்திருந்தார் .

மாவட்ட ஆட்சியர் ஆலோசனை:

இந்நிலையில் அனைத்து துறை செயலர்கள் உள்பட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஊரடங்கின் நிலை குறித்து நேற்று ஆலோசனை நடத்தியிருந்தார் .

ஆலோசனையின் முடிவில் பேசிய முதல்வர் பழனிசாமி ஊரடங்கின் நீட்டிப்பின் முக்கியத்துவத்தை தெரிவித்ததாக தெரிகிறது .

மருத்துவ நிபுணர்குழு :

அது மட்டுமின்றி கொரோன தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசால் ஏற்கனவே அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்குழு  ஒவ்வொரு கட்ட ஊரடங்கிலும் பின்பற்ற பட வேண்டிய நெறிமுறைகளை வகுத்து வந்தது .

நான்காவது கட்ட ஊரடங்கு:

எனவே தான் மூன்றவது கட்ட ஊரடங்கு நிறைவடையும் வேளையில் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்த நெறிமுறைகளை வகுக்க மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி சற்று முன் ஆலோசனை நடத்தியுள்ளார் .

நான்காவது கட்ட ஊரடங்கில் பின் பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சிறப்பு வழிகாட்டுதல்களை ஒவ்வொரு துறை செயல்களும் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது  .

 

Previous articleடாஸ்மாக் திறக்க  –  தமிழக அரசு மேல் முறையீடு
Next articleநாடு முழுவதும் ஊரடங்கு ஜூலை வரை நீட்டிக்கப்படுகிறதா ? ரயில்வே  சிக்னல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here