Home நிகழ்வுகள் தமிழகம் கோடை மழை  –  வானிலை மையம் அறிவிப்பு

கோடை மழை  –  வானிலை மையம் அறிவிப்பு

300
0

கோடை மழை  –  வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த மே மூன்றாம் தேதி தொடங்கிய அக்கினி நட்சத்திர வெய்யிலால் மக்கள் சொல்லன்ன துயரத்தை அனுபவித்து வருகின்றனர் .

இந்நிலையில் மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் விதமாக வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

வெப்ப சலனம்:

தமிழகத்தில் கோடை வெயிலால் நிலவி வரும் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்பொழுது பெய்து வரும் மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது .

மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .

இடியுடன் கூடிய மழை:

குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை ,ராமநாதபுரம், சிவகங்கை ,திருநெல்வேலி ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது .

மேலும் குமரி கடல் பகுதியில் கடல் காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

மீன்பிடிக்க தடை:

மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

தலைநகர் சென்னையில் வானம்   மேக மூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை:

மதுரை, திருச்சி ,கரூர் ,சேலம் ,தருமபுரி, வேலூர்  மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை நிலவ கூடும் என்று தெரிவித்துள்ளது.

Previous articleமுடியும் ஊரடங்கு ? இன்று இரவு பிரதமர் உரை
Next articleபோலீசாரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய சூரி: வைரலாகும் புகைப்படங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here