Home நிகழ்வுகள் தமிழகம் சென்னையை ஆக்கிரமித்த கொரோன வைரஸ் – இயல்பு நிலை திரும்புமா ?

சென்னையை ஆக்கிரமித்த கொரோன வைரஸ் – இயல்பு நிலை திரும்புமா ?

267
0

சென்னையை ஆக்கிரமித்த கொரோன வைரஸ் – இயல்பு நிலை திரும்புமா ?

உலகமே கொரோன வைரஸ் தாக்கத்தால் அரண்டு போயிருக்கும் நிலையில்  இந்தியா மட்டும் செவ்வனே கொரோன குறித்த போதுமான விழிப்புணர்வுடன் எந்த வித அச்சமும் இல்லாமல் மெல்ல மெல்ல இயங்க தொடங்கியிருக்கிறது என்றால் மிகையல்ல.

மார்ச் மாத இறுதி:

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோன வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 100 களில் இருந்தது

ஏப்ரல் மாத மத்தியில்:

அதே போன்று ஒவ்வொரு நாளும் நோய் தொற்றின் எண்ணிக்கையும் மிக குறைந்த அளவே இருந்து வந்தது.

ஆனால் ஏப்ரல் மாத மத்தியில் நோயளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு வேகத்துடன் அதிகரிக்க தொடங்கி தற்பொழுது 60000 தொட உள்ளது.

மரணிப்போர் எண்ணிக்கை:

இதில் குறிப்பிட தக்க செய்தி என்னவென்றால்  நோயையினால் மரணிப்போர் எண்ணிக்கை தேசிய அளவில் சுமார் 3 சதவீதத்துக்குள் இருந்து வருகிறது என்பதுதான் .

அதிகமான சோதனை:

சமீபத்திய நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம், அதிகமான சோதனை மேற்கொள்ளப்பட்டு விரைந்து முடிவுகளை பெற்றதுதான் முழுமுதற் காரணம் .

தமிழ்நாட்டு நிலைமை:

தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் ஆரம்பத்தில் மிக குறைந்த அளவில் இருந்து நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் பன்மடங்கு அதிகரித்துள்ளது , குறிப்பாக தலைநகர் சென்னை கடுமையான பாதிப்பினை கொண்டுள்ளது .

மக்கள் நெருக்கம் அதிகம்:

இயல்பாகவே மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சென்னையில் நோய் குறித்த அச்சம் இல்லாத நிலையில் தான் பெரும்பாலான மக்கள் இருந்து வருகின்றனர்.

சென்னை நிலைமை:

இன்றைய நிலவரப்படி சென்னையில் மட்டும் 2500  நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் இறப்பு சதவீதம்  1 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த பட்டுள்ளது என்பது சென்னை வாசிகளுக்கு ஆறுதல் தரும் செய்தியாகும் .

அச்சம் இல்லை:

சென்னை மக்களுக்கு மார்ச் மாத இறுதியில் இருந்த அச்சம் ஏப்ரல் மாத மத்தியில் இல்லாமல் போனதே இந்த நோயாளிகள் அதிகரிப்புக்கு மிக முக்கிய காரணமாகும் .

கொரோன முகாமிட்ட கோயம்பேடு:

கோயம்பேடு உள்ளிட்ட வெகு ஜனம் திரளும் இடங்களை அரசுகள் முறையாக கட்டுப்படுத்த தவறியதன் விளைவாகவும்  இந்த கொரோன வைரஸ் தாக்கம் அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது .

கோடம்பாக்கம் முதலிடம்:

இன்றைய நிலவரப்படி சென்னையில் ராயபுரத்தை பின்னுக்கு தள்ளி கோடம்பாக்கம் பதிப்பில் முன்னிலை பெற்றுள்ளது சென்னை வாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சென்னையின் இயல்பு வாழ்க்கை கேள்வி குறி:

ஒருபுறம்  அசுர வேகத்தில் அதிகரிக்கும் நோய் தொற்று , மறுபுறம் தளர்த்தப்படும் ஊரடங்கு , என்ற நிலையில் சென்னையின் இயல்பு வாழ்க்கை கேள்வி குறியாகி அரசுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் இன்றைக்கு மட்டும் சென்னையில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறிதான் போல !

Previous articleதலைவன் இருக்கின்றான் படத்தில் கமலுடன் இணைந்த விஜய் சேதுபதி!
Next articleஇந்தியன் 2 மீண்டும் தொடங்கப்படும்: இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு நிறைவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here