Home நிகழ்வுகள் தமிழகம் டாஸ்மாக் திறக்க  –  தமிழக அரசு மேல் முறையீடு

டாஸ்மாக் திறக்க  –  தமிழக அரசு மேல் முறையீடு

589
0

டாஸ்மாக் திறக்க  –  தமிழக அரசு மேல் முறையீடு

மதுபான கடைகளை மூட கோரிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது

சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி:

தமிழக்தில் கடந்த 6  தேதி டாஸ்மாக் கடைகளை சில நிபந்தனைகளுடன் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது

உயர்நீதிமன்றம்  தடை விதித்து  உத்தரவு:

எனினும் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்ற தவறியதால்  ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடையை திறக்க தடை விதித்து கடந்த 8 தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .

மேல் முறையீடு:

டாஸ்மாக் திறக்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது .

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட டாஸ்மாக் குறித்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே டாஸ்மாக் குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இந்த  வழக்குக்கும் பொருந்தும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது .

எனவே  தான் மதுரை கிளை உத்தரவையும் எதிர்த்து தமிழக அரசு இன்று தனியாக ஒரு மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது .

கேவியட் மனு:

இந்நிலையில் இந்த மேல்முறையீடு குறித்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ள வேண்டி பலர் கேவியட் மனுக்களை தாக்கல்  செய்துள்ளனர்.

நேற்று காங்கிரஸ் கட்சியும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here