Home நிகழ்வுகள் தமிழகம் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு ? தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு ? தமிழக அரசு முடிவு

753
0

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு ? தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை வருகிற 31  தேதி வரை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது .

கொரோனாவின் கோரப்பிடி:

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள நபர்களை மீட்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று வந்தாலும் ,பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் முயற்சிகளும் ஒருபுறம் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன .

மூன்றாவது கட்ட ஊரடங்கு:

தமிழகத்தில் தற்போது அமலில் இருந்துவரும் மூன்றாவது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைவதால் திங்கட்கிழமை முதல் நான்காவது கட்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது .

நான்காவது கட்ட ஊரடங்கில் இப்போது இருப்பதை காட்டிலும் மேலும் பல தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது .

சாலைபோக்குவரத்து தொடங்கும்:

குறிப்பாக சாலைபோக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் போக்குவரத்து ஊழியர்களும் தயாராகி வருகின்றனர் .

இந்நிலையில் தமிழகத்தில் கொரோன தாக்கமும் தினம் தினம் அதிகரித்து வருகிறது, மக்களுக்கு மேலும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

குறிப்பாக சென்னையில் நேற்று 309  பேர்க்கு கொரோன தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

மத்திய அரசு அனுமதி:

மத்திய அரசும் நான்காவது கட்ட ஊரடங்கு குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று அனுமதி அளித்து விட்டதால் தமிழக முதல்வர் பழனிசாமி ஊரடங்கின் அடுத்தகட்டமாக வருகிற 31  தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிக்க உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here