தமிழகத்தில் நீட்டிக்கப்படும் ஊரடங்கு ? முதல்வர் ஆலோசனை
தமிழகத்தில் தற்பொழுது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வரும் வேளையில் நான்காவது கட்ட ஊரடங்கு குறித்து அனைத்து துறை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார் .
கொரோன வைரஸ் தாக்கம்
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கொரோன வைரஸ் தாக்கம் கடுமையாக நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால் நிச்சயமாக பல்வேறு திருத்தங்களுடன் நான்காவது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது .
சென்னை:
கொரோன மையமாக சென்னை உருவாகி சமூக தொற்றாகி விட்டதோ என்று என்னும் அளவுக்கு நிலை சென்று கொண்டிருக்கிறது , அதிலும் ராயபுரம் மண்டலம் கொரோன தொற்றில் முதலிடம் வகித்து வருகிறது.
மருத்துவ நிபுணர்கள்:
இதன் காரணமாக சென்னையில் ஊரடங்கை தளர்த்தினால் நோய் தொற்றின் தாக்கம் கடுமையாக உயரக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .
பிரதமர் மோடி அனுமதி:
இந்நிலையில் நேற்று இரவு பேசிய பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கு குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்து கொள்ள அனுமதி அளித்திருப்பதாக தெரிவித்தார் .
தமிழக முதல்வர் பழனிச்சாமி பேட்டி:
இந்நிலையில் இன்று காலை பேட்டியளித்த தமிழக முதல்வர் பழனிச்சாமி கொரோன தொற்றின் தாக்கம் உச்ச பட்ச நிலையை அடைந்து பின்தான் குறைய தொடங்குவதாக தெரிவித்துள்ளார்
ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள்:
மேலும் பேசிய அவர் ஏற்கனவே அனைத்து கட்ட ஊரடங்கு காலத்திலும் ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோன வைரஸ் சோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .
உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க அனைத்து விவசாய வேலைகளும் தடையின்றி மேற்கொள்ள அனுமதி அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் மாதமும் ரேஷனில் பொருட்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.