நாடு முழுவதும் ஊரடங்கு ஜூலை வரை நீட்டிக்கப்படுகிறதா ? ரயில்வே சிக்னல்
நாடு முழுவதும் வரும் ஜூன் 30 வரை ரயில்கள் இயக்கப்படாது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது , மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மூன்றாம் கட்ட ஊரடங்கு:
கொரோன தடுப்பு நடவடிக்கையாக சில தளர்வுகளுடன் நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது .
பிரதமர் இசைவு:
மூன்றவது கட்ட ஊரடங்கு வரும் 17 தேதியுடன் நிறைவடையும் நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து மாநில அரசுகள் முடிவெடுத்து கொள்ள பிரதமர் இசைவு தெரிவித்திருந்தார் .
ரயில்வே அறிவிக்கை:
மூன்றவது கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் செயல்படுத்த பட்டு வருவதால் மக்கள் லேசாக பெருமூச்சு விட்ட நேரத்தில் ரயில்வே அமைச்சகத்தின் இந்த அறிவிக்கை மக்கள் தலையில் இடியாய் இறங்கியுள்ளது .
மக்கள் அவதி :
ஏற்கனவே பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால் கோடி கணக்கான மக்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வரும் வேளையில் ரயில்வே பயணிகள் சேவையை தொடங்க இருப்பதாக அண்மையில் தெரிவித்து முன்பதிவு நடைபெற்றது .
திடீர் திருப்பம்:
இந்நிலையில் திடீர் திருப்பமாக இன்று வரும் ஜூன் வரை எந்த சேவையும் தொடங்க வாய்ப்பில்லை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது .
நான்காவது கட்ட ஊரடங்கு:
இதன் காரணமாகி நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு வரும் ஜூலை வரை நீடிக்க படும் என்ற ஐயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது .
இருப்பினும் இது குறித்த அரசு தரப்பில் எந்த உறுதியான தகவலும் வெளியிடப்படவில்லை .