பேருந்து கட்டணம் உயர்வு ? தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் வரும் 17 முதல் 50 % பயணிகளுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
பேருந்து சேவை:
இந்நிலையில் மீனுடன் பேருந்து சேவையை இயக்கம் வேளையில் பேருந்து கட்டணம் சிறிதளவு உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது ,எனினும் இது குறித்து இன்னமும் அரசு தரப்பில் உறுதி படுத்தப்படவில்லை .
போக்குவரத்து கோட்டங்கள்:
தமிழகத்தில் சென்னை ,விழுப்புரம் ,கோவை ,கும்பகோணம் ,மதுரை ,நெல்லை உள்பட 8 போக்குவரத்து கோட்டங்கள் இயங்கி வருகின்றன .
இக்கோட்டங்களின் மூலம் சுமார் 24 ஆயிரம் பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன
900 கோடி வருமானம்:
இதன்மூலம் அரசுக்கு மாதம் சுமார் 900 கோடிக்கும் அதிகமாக வருமானம் கிடைப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன .
இதில் ஊழியர்களுக்கு ஊதியமாக 450 கோடியும் எரிபொருள் உள்ளிட்ட மற்ற செலவுகளுக்காக மீதி தொகையும் ஒதுக்கப்பட்டு வருகிறது .
பொது முடக்கம்: இழப்பு
இந்நிலையில் கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 22 தேதி முதல் பொது முடக்கம் அமலில் இருந்து வருவதால் இதுவரை சுமார் 1200 கோடிக்கும் அதிகமாக போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது , மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் சிக்கல் எழுந்துள்ளதால் அரசு வேறு வழியின்றி பேருந்து கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே இந்த கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு பேருந்து போக்குவரத்து தொடங்கும் நாளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது