மதுக்கடைகளுக்கெதிரான வழக்கு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி
நாடு முழுவதும் மதுக்கடைகளை திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது , நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்கள் நல திட்டங்கள்:
இன்றைய காலகட்டத்தில் மது என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் விருப்பப்பட்ட பொருளாகி விட்டதால் அதிலிருந்து பெரும் வருமானம் அரசுக்கு பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுகிறது.
இருப்பினும் மதுபான கடைகளை நடத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் இருக்கின்றன .
ஊரடங்கு:
தற்போது கொரோன வைரஸின் கோரா பிடியில் இருந்து தப்பி பிழைக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மதுபான கடைகளை திறக்க தடையாக உள்ளது .
வருமான இழப்பு:
இதனால் அரசுகளுக்கு பல்வேறு வகையில் பெருத்த வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
பொது நல மனு:
இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு காலங்களில் மதுமான கடைகளுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன .
உச்ச நீதிமன்றம் தள்ளுபடி:
இந்த வழக்குகளை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மதுக்கடைகள் என்பது அரசின் வருவாய் சார்ந்த பிரச்சினை என்பதால் தங்களால் எந்த உத்தரவையும் அளிக்க முடியாது என்று கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது .
டாஸ்மாக் மேல்முறையீடு:
ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் டாஸ்மாக் நிறுவனத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.