கொரோனா பாதிப்பு லீவ் கேட்டு கடிதம் எழுதிய பள்ளி மாணவன், 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் நீண்ட நாள் விடுமுறை தருமாறு கடிதம் எழுதியுள்ளான்.
இவன் எழுதிய இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அக்கடிதத்தில் அவன் கூறியது பின்வருமாறு.
எனக்கு சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி உள்ளது. இது கொரோனா பாதிப்பாக இருக்கலாம். கொரொனா மிக வேகமாக பரவும் தன்மை உடையது.
அதனால் மற்ற மாணவர்களின் நலன் கருதி எனக்கு நீண்ட கால விடுமுறை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதியுள்ளான்.
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தும் நிலையில் பரவி வருவதால் இது போன்று சில வேடிக்கையானா நிகழ்வுகளும் நடந்து வருகின்றது.
தலைமை ஆசிரியர் ஃப்லோரா கூறியது
இந்த கடிதம் எங்கள் கைக்கு வரவில்லை. அவனும் பிற மானவர்களும் சேர்ந்து எழுதி இதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அவனின் சீனியர் மாணவர்கள் இவனை இவ்வாறு எழுத சொல்லியிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதும் அவர்களாக இருக்க கூடும்.
மேலும் அவர்கள் பெற்றோரிடம் இது பற்றி பேசி அவன் உடல்நிலை செக் செய்து மருத்துவ சான்றிதல் வாங்கி வார சொல்லியுள்ளேன். இது போன்ற தவறுகள் இனிமே நடக்க கூடாது என கண்டித்துள்ளேன் என கூறினார்.