திருவாரூரில் 8 பேர் முன்னிலையில் எளிய முறையில் நடந்த திருமணம், ஊரடங்கு மற்றும் சமூக விலகலை கடைபிடித்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடந்தது.
தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால் விழாக்கள், திருமணங்கள் என அனைத்துமே தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.
இதனால் 20 பேருக்கு மேல் வைத்து திருமணம் நடத்தக்கூடாது என அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அதைகடைபிடிக்காமல் பல நிகழ்ச்சிகள் நடந்தன.
திருவாரூர் நேதாஜி சாலையில் மணமகன், மணமகள் வீட்டார் 8 பேர் பங்கேற்ற எளிமையான திருமணம் ஒன்று நடந்துள்ளது.
திருவாரூர் நேதாஜி சாலையில் வசிக்கும் தங்க மாரியப்பன் என்பவரது மகள் செல்வ மகேஸ்வரிக்கும், சென்னை கணேசன் என்பவரது மகன் தீபன் குமாருக்கும் இன்று காலை திருவாரூரில் உள்ள மணப்பெண் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட 8 பெரும் முககவசம் அணிந்திருந்தனர். மேலும் மணமக்களும் முகக்கவசம் அணிந்தும் மேலும் வந்தோருக்கு கிருமிநாசினி கொடுத்தும் திருமணம் நடைத்தப்பெற்றது.