கேரட் பீர் தயாரிப்பு செய்து விற்ற சென்னை இளைஞர் கைது, யுட்யூப் பார்த்து கேரட் பீர் தயாரித்து விற்பனை செய்த திருவொற்றியூர் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 3ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு இருக்கும் நிலையில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் குடிமகங்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் வீடியோ பார்த்து மது தயாரித்து அதிக பேர் போலீசில் சிக்கி வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் ஒருவர் சிக்கிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் சிக்கியுள்ளார்.
இந்நிலையில், திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுபானம் தயாரிப்பது போன்ற வாசனை வருவதாக அக்கம் பக்கத்தினர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் கேரட் மூலம் பீர் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, சுகுமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 2 லிட்டர் கேரட் பீரை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், யு டியூப் வீடியோ பார்த்து கேரட் பீர் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.