தமிழகத்திற்குள் தாமதமாக வேலையைக் காட்டினாலும் தாறுமாறாக கட்டியுள்ளது. விஸ்வரூபம் எடுத்தது கொரோனா. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 91-ஆக உயர்ந்து உள்ளது.
விஸ்வரூபம் எடுத்தது கொரோனா
கிடுகிடு என எண்ணிக்கை உயர்ந்ததால் சென்னையில் உள்ள சில பகுதிகள் சீல் வைக்கப்பட்டு உள்ளது. 16000 பேர் கொண்டு குழுவை அரசு உருவாக்க முடிவு செய்துள்ளது.
இந்த குழு வீடு வீடாக சென்று ஒருவரைக் கூட விடாமல் சல்லடை போட்டு சோதனை செய்ய உள்ளது. மொத்தம் 90 நாட்களுக்குள் சென்னையில் உள்ளவர்களை ஓட்டுமொத்தமாக சோதனை செய்யத் திட்டமிட்டு உள்ளனர்.
மடிப்பாக்கம், ராயபுரம், பனையூர், வியாசர்பாடி, போரூர், எண்ணூர், மணலி, கோட்டூர்புரம், அம்பத்தூர், திருவான்மியூர், ஆலந்தூர், மாதவரம், இந்த பகுதிகளில் கொரோன தாக்கம் அதிகமாக உள்ளது.
முதலில் இந்த பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட உள்ளது. காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும். கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பு உண்டா? போன்ற கேள்விகள் கேட்கப்படும்.
16000 பேர் மாநகராட்சி குழுவை ஈடுபடுத்த உள்ளனர். அவர்களை வைத்து 90 நாட்களில் சென்னையின் முக்கியப்பகுதிகள் முழுவதும் சோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.