முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்களுக்கு அரசுடன் இணைந்து உதவிட தன்னார்வத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200 நாட்களுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து பல லட்சம் மக்களை பாதித்துள்ளது.
இதனால் ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் உயிரிழப்பில் அதிகரித்து வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த அந்தந்த அரசாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இந்தியாவில் தற்போது 21 நாள் பிரதமர் அறிவித்த படி ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.
அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நம் தமிழ்நாட்டு அரசின் சுகாதாரத்துறை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது அதிக மக்களை கொரோனா சோதனை செய்து வருகிறது.
கொரோனா பல முன்னெச்சரிக்கைகள் எடுத்து வருகிறது. பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது.
நம்முடைய முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சமூக வலைதளப் பக்கங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.
சிலர் வைக்கும் கோரிக்கைகளை அப்போது பதிலளித்து அந்த கோரிக்கையை நிறைவேற்றி வருகிறார்.
தற்போது அவர் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில்
பல்வேறு மத தலைவர்கள் கேட்டுக் கொண்டதின்படி வயதானவர்கள், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோய் உள்ளவர்களின் விவரங்கள் அறிந்து,
அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்குவதற்கு அரசுடன் சேர்ந்து தன்னார்வ தொண்டர்கள் இப்பணியில் ஈடுபட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்
இதை மக்கள் பாராட்டியும் பகிர்ந்தும் வருகிறார்கள்