Home நிகழ்வுகள் தமிழகம்  பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் – ஜெயலலிதா பிறந்தநாள்

 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் – ஜெயலலிதா பிறந்தநாள்

512
0
 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் - ஜெயலலிதா பிறந்தநாள்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் – செல்வி ஜெ. ஜெயலலிதா பிறந்தநாள், தமிழக பெண் குழந்தை பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாநில பெண் குழந்தைகள்  பாதுகாப்பு தினம்

பிப்ரவரி 24, மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான  செல்வி ஜெ. ஜெயலலிதா பிறந்த நாள். இந்த நாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க அரசின் முடிவு மிக சரியானது என்பதை ஜெயலலிதா அமல்படுத்திய திட்டங்களைப் பார்த்தாலே நமக்கு புலப்படும் என்பதை மறுக்க முடியாது  .

திரையுலகில் கொடிகட்டி பறந்த ஜெயலலிதா:

1980-களில் திரையுலகில் கொடிகட்டி பறந்த ஜெயலலிதா புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்றால் அரசியலில் நுழைந்தார்.

அவர் மரணிக்கும் வரை அரசியலில் முடிசூடா அரசியாக விளங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.

அவரது வாழ்வில் பெறாத சோதனைகளும் இல்லை சாதனைகளும் இல்லை எனலாம். அந்த அளவுக்கு அவரது வாழ்க்கை மேடு பள்ளங்கள் நிறைந்தது  .

தொட்டில் குழந்தை திட்டம்:

ஜெயலலிதா கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் முறையாக முதல்வராக பதவியேற்றார். 1992-ஆம் ஆண்டு நாட்டிலேயே முதல் முறையாக பெண்சிசுக்கொலையை தடுக்கும் பொருட்டு தொட்டில் குழந்தை திட்டத்தை அமல்படுத்தினார்.

இதன்மூலம் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் பெறாத தாயாக  விளங்கினார். இந்த திட்டம் மூலம் பிறந்த பெண் குழந்தைகளை வளர்க்க முடியாத சூழலில் உள்ள பெற்றோர்கள், அரசின் காப்பகத்தில் ஒப்படைக்கலாம் என்று வழி ஏற்படுத்தப்பட்டது .

பெண் குழந்தை பாதுகாப்பு  திட்டம்:

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், இந்த திட்டம் மூலம் குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அப்பெண்ணின் பெயரில் வங்கியில் 50000 ரூபாய் வைப்புத்தொகை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என்றால் இருவரின் பெயரிலும் 25000  ரூபாய்  இருப்பு வைக்கப்பட்டு, 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் வழங்கப்பட்டது.

அந்த திட்டத்தில் பயனடைந்தோர் இன்று நல்ல வாழ்வு பெற்று சமூகத்தில் சிறந்து விளங்கி வருகின்றனர்

கடந்த 2011-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகப் பதவியேற்றவுடன் பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவித் தொகையும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி ஏழைப்பெண்களின் திருமண வாழ்வை சொர்க்கம் ஆக்கினார் .

அதுமட்டுமின்றி அம்மா உணவகம் , அம்மா சிறப்பு காப்பீடு, பாலூட்டும் தாய்மார்களுக்கு பொது இடங்களில் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்க்காக தனியறையை உருவாக்கி பெண்களின் மானம் காத்தார் .

பெண்களுக்கான முழு உடல் எடை பரிசோதனை திட்டம்:

ஒருவரின் உடல் நலனை உடல் எடையை வைத்து எடை போடலாம் என்ற விதிக்கேற்ப இந்த பரிசோதனை திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசு அங்கன்வாடி மையம் மூலம் குழந்தைகள், இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களின் உடல் எடை அளவிடப்பட்டு அதற்கேற்றாற் போல் ஊட்டச்சத்து மாவு வழங்கப்பட்டு வருகிறது .

அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம்:

அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு உதவிடும் வகையில் அவர்களுக்கு சோப்பு, பொம்மை, துண்டு, ஷாம்பு, புதிய ஆடை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகம் இலவசமாக வழங்கப்படும் .

அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்:

இந்த திட்டத்தின் கீழ் கருவுற்ற பெண்களுக்கு மகப்பேறு வரை மூலிகைகள் தரப்படும். இன்னும் பல குறிப்பிடத்தக்க திட்டங்கள் உள்ளன.

பதவி ஏற்றது முதல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கே உரித்தான சீரிய திட்டங்கள் மூலம் பெண்களை பாதுகாத்தார் என்றால் மிகையல்ல.

அவர் ஆட்சியில் ஊழல், சொத்துக்குவிப்புகள் என்று பல குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனைகள் வழக்கப்பட்டாலும், பெண்களுக்கு என்று அவர் செய்த நலத்திட்டங்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கது.

எனவே அவருடைய பிறந்த தினம், பெண் குழந்தைகள் பாதுக்காப்பு நாளாக கொண்டாடுவது சிறந்ததே.

Previous articleஉலக சிந்தனை தினம்; வரலாற்றில் இன்று 22/02/2020
Next article23/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here