Home நிகழ்வுகள் தமிழகம் இறந்த பின் ஒரு ஊருக்கே கொரோனா தொற்றை பரப்பிய தமிழர்

இறந்த பின் ஒரு ஊருக்கே கொரோனா தொற்றை பரப்பிய தமிழர்

3477
0
கொரோனா

இறந்த பின் ஒரு ஊருக்கே கொரோனா தொற்றை பரப்பிய தமிழர். ராமநாதபுரம் கீழக்கரை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.

உடல் நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சென்றத ஒருவர் உயிரிழந்தார்.

அவர் எதனால் உயிரிழந்தார் என தெரிந்து கொள்ளும் முன்பே உறவினர்களிடம் பிரேதத்தை கொடுத்து அனுப்பிவிட்டனர்.

அவருக்கு செய்யப்பட்ட கொரோனாவைரஸ் பரிசோதனை முடிவுகள் வரும் முன் மருத்துவமனை அதிகாரிகள் உறவினர்களிடம் பிரேதத்தை ஒப்படைத்துவிட்டனர்.

உறவினர்கள் சென்னையில் இருந்து நேராக கீழக்கரைக்கு உடலை கொண்டு வந்து இறுதிச்சடங்குகள் செய்து அடக்கம் செய்து உள்ளனர்.

இதில் கீழக்கரையைச் சேர்ந்த அதிகமான மக்கள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த இறுதி சடங்கு முடிந்த சில மணி நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறது என மருத்துவமனை கூறியுள்ளது.

தற்பொழுது கீழக்கரை பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று இருக்கும் நேரத்தில் எப்படி அலட்சியமாக மருத்துவமனை ஊழியர்கள் நடந்து கொண்டனர் என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Previous articleஅகோர பசி: ஒரு குண்டா சோற்றை லபக் என சாப்பிட்ட Alya Manasa
Next articleநம்ம விஜயகாந்த்க்கு வானத்தைப் போல மனசு
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here