கள்ளச்சாராயம் : தமிழகத்தில் பலர் தற்போது பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சத்தொடங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கினால் மக்கள் வீட்டிலேயே இருப்பதனால் மனதளவில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்த மனமாற்றம் மக்களை தவறான வழியில் வழிநடத்திச்செல்வது மட்டுமல்லாமல், நாட்டின் சட்ட ஒழுங்கையும் சீர்குலைக்கின்றது.
இந்திய அரசிற்கு பெரிதும் வருவாய் ஈட்டும் துறையாக இருந்து வருவது மது விற்பனைதான். தற்போதைய ஊரடங்கினால் பல மதுபிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் ஒரு சிலர் அரசாங்கத்திற்கு தெரியாமல் கள்ளச்சாராயமும் காய்ச்ச தொடங்கிவிட்டனர்.
அப்படி ராஜபாளையம் அருகே வனப்பகுதியினை ஒட்டி அமைந்த ஒரு வாழைத்தோப்பில் அதிக அளவில் கள்ளச்சாராயம் காய்ச்ச தொடங்கியுள்ளனர்.
இந்த செய்தி அறிந்த காவல்துறையினர் உடனே அங்கு விரைந்ததும், காலவர்களை பார்த்த அவர்கள் தலைதெறிக்க காட்டுக்குள் ஓடி ஒழிந்ததாக கூறுகின்றனர்.
மேலும் அதிக அளவில் அவர்கள் காய்ச்ச வைத்திருந்த சரக்குகளை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலே இந்த மாதிரியான சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு காரணம் என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.